இடுகைகள்

சித்திரபாடம் கற்போம்

சிகிரியா (Sigiriya)

  சிகிரியாவின் தோற்றமும் வரலாறும் இலங்கையின் இணையற்ற கலைப் பாரம்பரியத்துடன் கூடிய புராதன இடங்களில் ஒன்றாக சிகிரியா குன்று விளங்குகிறது. சிகிரியாவானது மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் உள்ள இனாமலுவக் கோரளையில் அமைந்துள்ளது. இயற்கையாக அமைந்த இச்சிகிரியாக் கற்குன்றானது கிட்டத்தட்ட 600 அடி உயரமானதாகக் காணப்படுகிறது. இக்குன்றிற்கு சிகிரியா எனப் பெயர்வர இரண்டு காரணங்கள் உள்ளது. 1. சிகிரியா குன்றினை தூரத்தில் இருந்து பார்க்கும் போது சிங்கம் ஒன்று அமர்ந்திருப்பதைப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும். 2. சிகிரியாக் குன்றின் அடிவாரத்தில் அமைந்துள்ள நுழைவாயிலின் இருபுறமும், சிங்கங்களின் பாதங்கள் காணப்படுகின்றது.       இதனால், சிகிரியாவினை சிங்ககிரி எனவும் சிககிரி எனவும் அழைப்பர்கள். இச்சிகிரியா குன்றானது ஆசியாவின் மிக முக்கியமான தொல்பொருள் சார்ந்த இடங்களில் ஒன்றாகக் காணப்படும் சிகிரியாவானது 1982ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பால் உலக அருஞ்செல்வமாக பிரகடனப்படுத்தப்பட்டது.       சிகிரியா கோட்டையானது கி.பி 5ம் நூற்றாண்டு காலப்பகுதியில் (கி.பி.477-495) காசியப்ப மன்னனின் இராசதானிய

யாப்பகூவா கோட்டையின் கலை அம்சங்கள்