
- கம்பளைக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட எம்பக்க ஆலயம் கண்டி மாவட்டத்தில் உடுநுவர மத்திய பகுதி திக்கெயயில் அமைந்துள்ளது.
- 14ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த 111ஆம் விக்கிரமபாகு மன்னன் காலத்தில் தெல்மட மூலாச்சாரி உட்பட அவரது சீடர்களால் இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
- இது மேளவாத்தியக்காரர் கண்ட கனவு ஒன்றின் பிரதிபலனாக கதிர்காமக் கடவுளுக்கு அர்ப்பணிக்க நிர்மாணிக்கப்பட்டதெனக் கூறப்படுகிறது.
- வாயில் மண்டபம், நீள்மண்டபம், கர்ப்பக்கிரகம் என்பன எம்பக்க ஆலயத்தில் காணக்கூடிய சிறப்பு அமைப்புகளாகும்.
- எம்பக்க ஆலய மரத்தூண்களிலும் செதுக்கல் வேலைப்பாடுகளைக் காணலாம்.
- எம்பக்க தேவாலயத்தின் கூரையில் 26 கை மரங்கள் ஒரு பலகை ஆணியுடன் பொருத்தப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது 'மடொல் குருபாவ' என்று அழைக்கப்படுகிறது. இது இலங்கைக் கட்டக் கலைஞரின் கைவண்ணத்தை எடுத்துக் காட்டுகிறது.
- 10 தூண்களைக் கொண்டவை.
- ஒவ்வொரு தூணிலும் சதுர சட்டங்கள் நான்கு வீதம் உள்ளன.
- இதற்கேற்ப 10 தூண்களிலும் 40 சதுரங்களில் செதுக்கல்கள் உள்ளன.
- 32 தூண்களைக் கொண்டவை. ஒவ்வொரு தூணிலும் நான்கு சதுரங்கள் வீதம் உள்ளன.
- இங்குள்ள செதுக்கல்களின் எண்ணிக்கை 128 ஆகும்.
பிரதானமான 5 கருப்பொருள்களின் கீழ் இச்செதுக்கல்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
1. கற்பனை விலங்கு உருவங்கள்
2. விலங்கு உருவங்கள்
3. மனித வாழ்கையுடன் தொடர்புபட்ட செதுக்கல்கள்
4. கரை அலங்காரம் (லீஸ்தர)
5. பூக்கள் கொடிகள்; அலங்காரம்
பாரம்பரியமான சிங்கள அலங்கார வடிவமைப்புக்களில் காணப்படும் சிறப்பான கற்பனை வடிவமைப்புக்களில் பல எம்பக்க ஆலய மரச் செதுக்கல் வேலைப்பாடுகளில் காணப்படுகின்றன.
1. கற்பனையான பிராணி மற்றும் ஏனைய பிராணி ஆக்கங்கள்.
2. விலங்கு உருவங்கள்
3. மனித வாழ்கையுடன் தொடர்புபட்ட செதுக்கல்கள்
4. கரை அலங்காரம் (லீஸ்தர)
5. பூக்கள் கொடிகள்; அலங்காரம்
பாரம்பரியமான சிங்கள அலங்கார வடிவமைப்புக்களில் காணப்படும் சிறப்பான கற்பனை வடிவமைப்புக்களில் பல எம்பக்க ஆலய மரச் செதுக்கல் வேலைப்பாடுகளில் காணப்படுகின்றன.
- பேரண்டப்பட்சி
- இரு தலைப்பட்சி
- கின்னரப்பெண்
- யானைப் பட்சி (எற்கந்த லிகினியா)
- நாரிலதா
- சரபெத்தியா
- ரிஷப குஞ்சரம்
- றபான் இசைப்பவன்
- மல்யுத்தம்
- குதிரை வீரன்
- நடன மாது
- போர் வீரன்
- குழந்தைக்குப் பாலூட்டும் தாய்.
கருத்துகள்