எகிப்தியக் கலை (Egypt )

 

எகிப்தின் அமைவிடம்: 

தனித்தனியே உருவான பண்டைய உலகின் ஆறு நாகரீகங்களுள் முதன்மை பெற்றதும் இன்றுவரை ஆச்சரியத்தில் ஆழ்த்திவரும் நாகரீகமுமாக காணப்படுவது எகிப்திய நாகரீகமாகும். இந்நாகரீகமானது உலகின் மிக நீண்ட நதியான நைல் நதிக்கரையையண்டி தோற்றம் பெற்றதால் இதனை நைல் நதி நாகரீகம் எனவும் அழைப்பர். அதாவது, மனிதனுக்கும் தண்ணீருக்கும் உள்ள உறவை விளக்குவதற்கு எகிப்து நாகரிகத்தைவிட வேறு எதையும் உதாரணமாக சொல்ல முடியாது. நைல் நதி நாகரிகத்தின் கூற்றின் படி எகிப்தியர் முதன் முதலில் நிலைத்து வாழ ஆரம்பித்த இடம் எகிப்து. அதாவது நைல் நதிச் சமவெளி. எகிப்தியர்கள் தங்களை வாழவைத்த தெய்வமாக நைல் நதியைக் கருதுகின்றனர் இதனால், ஹெரோட்டஸ் என்ற கிரேக்க தத்துவமேதை எகிப்த்து நைல்நதி தந்த கொடை என்றார். 

        வடக்கு ஆபிரிக்கா கண்டத்தில் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய மூன்று கண்டங்களும் சந்திக்கும் இடத்தில் எகிப்து அமைந்துள்ளது. இஸ்ரேல், ஜோர்டான், லிபியா, சவுதி அரேபியா, சூடான் ஆகியவை எகிப்தின் அண்டை நாடுகள். மூன்று பக்கங்களில் கடல் – வடக்கில் மத்தியதரைக் கடல், தெற்கிலும் கிழக்கிலும் செங்கடல், தெற்கில் லிபியப் பாலைவனம். இந்தப் பூகோள அமைப்பு, பக்கத்து நாடுகளிலிருந்து இயற்கை தந்த பாதுகாப்பு.  இதனால், எகிப்தின் நாகரிகமும், தனித்துவத்தோடு வளர முடிந்தது. 

    எகிப்தின் இன்றைய அதிகாரபூர்வமான பெயர் எகிப்திய அரபுக் குடியரசு. நாகரிக ஆரம்ப காலங்களில் இதனை கறுப்பு நிலம் என அழைத்தனர். நைல் நதி அடிக்கடி வெள்ளப் பெருக்கெடுத்துப் பாய்ந்துவரும். பெருவெள்ளம் ஓயும்போது, கறுப்பு நிறக் கரிசல் மண்னை விட்டுச் செல்லும், இதனால் இந்தப் பெயர். இதேபோல் எகிப்தின் நிலப்பரப்பில் 94.5 சதவிகிதம் பாலைவனம்.  இந்த நிலப்பரப்பு சிவப்பு மண் கொண்டது. எனவே, இதனை சிவப்பு நிலம் எனவும் அழைத்தார்கள்.

எகிப்த்திய இராச்சியத்தின் தோற்றம்:   

    நைல்நதியானது எகிப்தை ஊடறுத்துச் செல்கின்றது. ஆரம்ப காலத்தில் நதியின் இருபக்கமும் இருந்த குடியிருப்புக்களை மேல் எகிப்து கீழ் எகிப்து என இரண்டாக வகுத்தனர். இவை இரண்டும் பல நகரங்களைக் கொண்ட பல சிற்றரசுகளையுடையதாகக் காணப்பட்டது. இந்த நிலப்பகுதிகளை ஓரே அரசின் கீழ் கொண்டுவரும் அதிகாரப் போர்கள் நடைபெற்று முடிவில் ஒரே அரசின் கீழ் எகிப்து கொண்டுவரப்பட்டது. இதன் முதல் அரசனாக (போரோ) நார்மர் முடிசூடினார். கி.மு 3150 அளவில் இவரது ஆட்சி ஆரம்பித்தது. இவரைத் தொடர்ந்து பல போரோக்கள் சுமார் 3000 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தனர். 

எகிப்திய காலகட்டத்தை மூன்று முக்கிய பகுதிகளாக வகுக்கலாம். 

1. புராதன இராச்சியம் (கி.மு 2649 – கி.மு 2150)

2. மத்திய இராச்சியம் (கி.மு 2040 – கி.மு 1640)

3. புதிய இராச்சியம்  (கி.மு 1550 – கி.மு 1070)

இறுதிக் காலகட்டத்தில் எகிப்து அலெஸ்க்சாண்டர் வசமானது. அவரின் பின் அவரது தளபதியான தலமி வம்சத்தவரான சொடொர் தன்னை அரசனாக அறிவித்தான். இவ்வாறு மசிடோனிய தலமிகள் 30 வருடங்கள் ஆட்சி புரிந்த பின்னர் கிமு 31 ஆம் ஆண்டில், ஏழாம் கிளியோபாட்ரா ஆட்சியின்போது தொடக்க ரோமப் பேரரசு எகிப்தைக் கைப்பற்றி அதனை தன் பேரரசின் ஒரு மாகாணம் ஆக்கியது.

எகிப்திய கட்டிடக்கலை

    எகிப்திய நாகரிகம் பல்வேறு துறைகளில் ஜொலித்தது என்றபோதும், அதன் உச்சகட்டத் தனித்துவம் கட்டடக் கலைதான். பல வரலாற்றாசிரியர்கள் உலகக்கட்டிடக்கலை வரலாற்றின் தொடக்கத்தை இங்கிருந்துதான் தொடங்குகின்றனர். எகிப்திய கட்டிடங்களில் மரம் பற்றாக்குறை காரணமாக சூரியவெப்பதில் சுட்ட மண் செங்கற்கள் மற்றும் கல் ஆகிய கட்டிடப் பொருட்கள் கணிசமான அளவு பயன்படுத்தினர்.  

    எகிப்து மக்களுக்குச் செங்கல் தயாரிப்பது கை வந்த கலையாக இருந்தது. நைல் நதியிலிருந்து கிடைத்த களிமண்ணோடு, வைக்கோல், தேவையான அளவு தண்ணீர் சேர்த்தார்கள். இந்தக் கலவையைக் கால்களால் மிதித்து, உதைத்து, கலவை தேவையான பதத்துக்கு வந்தவுடன் வார்ப்புகளில் வைத்து, தேவையான வடிவங்கள் ஆக்கினார்கள். இவை வெயிலில் காய வைக்கப்பட்டு செங்கற்கள் ஆயின. அரண்மனைகள், மாளிகைகள், கோட்டைகள், வீடுகள் ஆகியவை கட்டச் செங்கற்களையும், கோவில்கள், கல்லறைகள், கோட்டைச்சுவர்களுக்குக் கற்களையும் உபயோகப்படுத்துவது வழக்கம். 

வீடுகள்

    வீடுகள் ஒன்று அல்லது இரண்டு மாடிக் கட்டங்களாக இருந்தன. வீடுகளில் கட்டில்கள்,  பெட்டிகள், மேசைகள் போன்ற மரச் சாமான்கள் இருந்தன. பல வீடுகளில், வரவேற்பு அறை, வசிக்கும் அறை, படுக்கை அறைகள், குளியல் அறைகள், உணவு பாதுகாக்கும் அறைகள் எனப் பல அறைகள் இருந்தன.

பணக்காரர்கள் வீடுகளில், இன்னும் அதிகம் வசதிகள், சொகுசுகள். பெரிய, பெரிய அறைகள். வீட்டுக்கு நடுவில் பூச்செடிகள் நிறைந்த பூங்கா, பல குளியல் அறைகள் பாத்திரங்கள். அரண்மனைகள் தனி நகரங்கள்போல் வடிவமைக்கப்பட்டிருந்தன. அரண்மனைக்கு உள்ளேயே கோயில்கள் இருந்தன.

எகிப்திய ஆலயங்கள்

    எகிப்தியக் கோவில்கள் பண்டைய எகிப்தின் பாரோ மன்னர்களினதும், எகிப்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் இருந்த மக்களினதும் வழிபாட்டுக்கெனக் கட்டப்பட்டவையாகும். இக் கோவில்கள் அதில் குடியிருந்த மன்னர்களினது அல்லது தெய்வங்களினது இல்லமாகக் கருதப்பட்டது. இங்கு எகிப்தியர்கள் பலியிடல், விழாக்கள் போன்ற தமது சமயச் சடங்குகளை மேற்கொண்டனர். இக்கோவில்களைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும் பாரோக்களின் கடமையாகக் காணப்பட்டது. இதற்காக பாரோக்கள் குறிப்பிடத்தக்களவு வளங்களை கோவிலின் கட்டுமானத்துக்கும் பராமரிப்புக்கும் ஒதுக்கினர். பெரும்பாலான சடங்குகள் பாரோக்களால் நியமிக்கப்பட்ட பூசகர்களினால் நடத்தப்பட்டன. தேவையான போது பாரோக்கள் பெரும்பாலான சடங்குகளை மேற்கொள்ள பூசகர்களை அனுமதித்தனர். எனினும் மக்களுக்கு இவ்வாறான சடங்குகளில் நேரடியாகக் கலந்துகொள்ளவோ கோவிலின் மிகவும் புனிதமான இடங்களில் நுழையவோ அனுமதியளிக்கப்படவில்லை. எவ்வாறாயினும் கோவிலானது எகிப்திலிருந்த எல்லா வகுப்பு மக்களுக்கும் முக்கியமான வழிபாட்டிடமாக இருந்தது. அவர்கள் அங்கு பிரார்த்தனை செய்யவும், காணிக்கைகளைச் செலுத்தவும், அங்கிருந்த தெய்வத்திடம் அறிவுரைகளைக் கேட்பதற்கும் சென்றனர்.

    கோவிலின் முக்கியப் பகுதி கருவறையாகும். இங்கு அக்கோவிலிலுள்ள தெய்வத்தின் உருவச்சிலை காணப்பட்டது. கருவறைக்கு வெளியே இருந்த அறைகள் மிகப் பிரமாண்டமாகவும் அழகாகவும் உருவாக்கப்பட்டன. எனவே, கி.மு.4000இல் சிறியவையாக இருந்த இந்தக் கோயில்கள் கி.மு. 1550-1070 காலப்பகுதியில் எகிப்திய இராச்சியத்தின் கீழ் பிரமாண்டமான மாளிகைகளாக வளர்ந்தன. இம் மாளிகைகளே பண்டைய எகிப்தியக் கட்டடக்கலையின் மாபெரும் உதாரணமாகவும், நீண்டகாலமாக நிலைத்து நிற்கும் கட்டடமாகவும் காணப்படுகின்றன. அவர்களது வடிவமைப்பில் மூடப்பட்ட மண்டபங்கள், திறந்தவெளி அரங்குகள், விழாக்காலங்களில் பயன்படுத்தப்படும் பாதையில் அமைக்கப்பட்ட பாரிய நுழைவாயில்கள் என்பன காணப்பட்டன. இவைதவிர, கோவிலைச் சுற்றி அமைக்கப்பட்ட வெளிமதிலின் உள்ளே பல்வேறு இரண்டாம் நிலைக் கட்டடங்களும் காணப்பட்டன. 

    இவ்வாறான கோவில்கள் பாரியளவிலான நிலங்களையும் கொண்டிருந்தன. அந்நிலங்களைப் பராமரிப்பதற்கென ஆயிரக்கணக்கான வேலையாட்களையும் அது கொண்டிருந்தது. இதனால் கோவில்கள் சமய நிலையங்களாக மட்டுமன்றி முக்கிய பொருளாதார மையங்களாகவும் திகழ்ந்தன. இத்தகைய கோவில்களை நிர்வகித்த பூசாரிகள் ஆட்சியதிகாரத்தில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பிரயோகித்தனர். மேலும் சிலவேளைகளில் மன்னர்களின் அதிகாரத்துக்கு சவால் விடுமளவுக்கும் அவர்கள் முன்னேறியிருந்தனர்.

    எகிப்தில் கோவில் கட்டும் பணி எகிப்தின் வீழ்ச்சி மற்றும் ரோமப் பேரரசுக்கு அடிமைப்படும் வரையில் தொடர்ந்தது. கிறித்தவ மதத்தின் வருகையைத் தொடர்ந்து எகிப்திய சமயம் பாரிய இடைஞ்சல்களை எதிர்நோக்கியது. அதன் கடைசிக் கோவில் கி.பி.550ல் மூடப்பட்டது.பல நூற்றாண்டு காலமாக இக் கட்டடங்கள் அழிவையும் தொடர் புறக்கணிப்பையும் எதிர்நோக்கின. ஆயினும், 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், பண்டைய எகிப்தைப் பற்றிய ஆர்வம் ஐரோப்பாவில் பரவியது. இதனால் எகிப்தியவியல் எனும் புதிய விஞ்ஞான ஆராய்ச்சியியலும் தோன்றியது. எகிப்திய நாகரிகத்தின் சிதிலங்களைப் பார்வையிடுவதற்கு சுற்றுலாப்பயணிகளும் இங்கு வரத்தொடங்கினர்.அதிகளவிலான கோவில்கள் இன்று தப்பியுள்ளன. இவற்றுட் சில, உலகப்புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களாகவும் மாறியுள்ளன. நவீன எகிப்தின் பொருளாதாரத்துக்கு இவை பெரும் பங்களிப்பு வழங்குகின்றன. எகிப்தியவியலாளர்கள் தப்பிய கோவில்கள் மற்றும் அழிந்த கோவில்களின் எச்சங்களைப் பற்றி தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர். ஏனெனில் இவை பண்டைய எகிப்திய சமூகத்தைப் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கான மிக இன்றியமையாத ஆதாரங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளன.

லக்சோர் ஆலயம்


              லக்சோர் கோயில் என்பது லக்சூர் நகரில் நைல் நதியின் கிழக்கு கரையின் சமவெளியில் அமைந்துள்ள மிகப் பழமையான எகிப்திய கோவில் வளாகமாகும். தீபிஸ் (Thebes) என்னும் பண்டைய எகிப்திய நகரம் இருந்த இடத்தில் அமைந்துள்ளது. கி.மு 1400 இல் கட்டப்பட்ட இக்கோவிலானது தற்போது கிட்டத்தட்ட பாழடைந்த நிலையில் காணப்படுகின்றது. இது ஒரு பாரிய அளவான மதம் சார்ந்த கட்டடத் தொகுதியாகும். இக் கோயில் அமுன், முட், சொன்ஸ் என்னும் பண்டைய எகிப்தியர்களின் மூன்று கடவுளர்களுக்காக அமைக்கப்பட்டது.

        பண்டைய எகிப்தியரும் இந்துக்களைப் போல் கடவுள் வழிபாட்டில் கடவுளை ஒரு குடும்ப மையமாகக் கொண்டு ஆமொன் (Amon) என்ற கடவுளை முழுமுதற் கடவுளாகவும் அவரின் மனைவியாக மூட் (Mut) ஐயும் உருவமாக வழிபட்டார்கள். இந்துக்களைப் போல் கடவுளுக்கு பல்வேறு பெயர் கொண்டும் வழிபட்டதுடன் சூரியனையும் முக்கிய கடவுளாக வழிபட்டார்கள். அத்துடன் தம்நாட்டு மன்னர்களையும் (போரோக்கள்) கடவுளுக்குச் சமமாக வழிபட்டார்கள். 

            பழங்கால எகிப்தின் புதிய அரசுக் காலத்தில் கொண்டாடப்பட்டு வந்த ஒப்பெட் விழா (Opet Festival) இக் கோயிலை மையமாகக் கொண்டே இடம்பெற்றது. இவ் விழாவில், அமுன் கடவுளின் சிலை அருகாமையில் உள்ள கர்னாக் கோயிலிலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படும். இங்கே அமுன், அவரது துணைவியான முட் பெண் கடவுளுடன் தங்க வைக்கப்பட்டு, விழாக் கொண்டாடப்படும்.

    லக்சர் கோயிலுக்கான நுழைவாயில் வடக்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. இந்த நுழைவாயிலுக்குச் செல்லும் பாதையின் இரு மருங்கும் வரிசையாக ஆட்டுத் தலை கொண்ட ஸ்ஃபிங்ஸ் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப் பாதை, பிற்காலத்தில், 30 ஆவது அரச வம்சத்தைச் சேர்ந்த முதலாவது நெக்டனெபோவின் காலத்தில் அமைக்கப்பட்டது. 

    லக்ஸோர் பிரதானமாக இரண்டு மண்டபங்களைக் கொண்டது. முதலில் லக்சர் கோவில் எகிப்தின் 18 ஆவது அரசவம்சத்தைச் சேர்ந்த ஆமன்ஹோரப்111 என்பவரால் உருவாக்கப்பட்டது. பின்பு 19 ஆவது அரச வம்சத்தைச் சேர்ந்த மகா இராம்செஸ்சினால் (Rameses11) பிரமாண்டமாக கட்டப்பட்டது. பிற்பட்ட காலத்தில் பல அரசர்களது துணையுடன் கட்டிடவேலைகள் நடந்த போதிலும் மேற்குறிப்பிட்ட இரு அரசர்களுமே இந்தக் கோயிலைப் பொறுத்தவரை முக்கியமானவர்கள். எனவே, இரு மன்னர்களின் சிலைகள் லக்சர் கோவிலின் முற்பகுதியில் உள்ளது.  

    லக்சர் கோவில் தென்கிழக்கு எகிப்தில் அமைந்த கபேல் எல்-சில்சீலா பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட மணற்கற்களால் கட்டப்பட்டது. கபேல் எல்-சில்சிலா பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட இந்த மணற்பாறை நபுயன் மணற்பாறை என குறிப்பிடப்படுகிறது.

லக்சர் கோயில் அமைப்பு 

    எகிப்தின் கோயில்கள் அடிப்படையில் இந்துக் கோயில்களின் அமைப்பைக் கொண்டவை. கோயிலில் முதலில் தெரியும் இராஜகோபுரம். அதைக் கடந்தால் உள்ளே அமைந்த பெரிய திறந்தவெளி மைதானம் தென்படும். அதனைக்கடந்தால் மூடிய இருளான உள் மண்டபம். இதைக் கடந்து சென்றால் உள்ளே கர்பக்கிரகத்தில் விக்கிரகங்கள் இருக்கும். இவ்வாறு இந்துக் கோயிலின் அமைப்பை போன்றே எகிப்திய கோயில்கள் அமைந்துள்ளன.

    இக் கோயிலின் நுழைவாயிலில், 24 மீட்டர் (79 அடி) உயரம் கொண்ட வாயில் கோபுரம் போன்ற அமைப்பு உள்ளது. இதனை பிலோன் (Pylon) என அழைப்பர். இது இரண்டாவது ராமேசஸினால் கட்டுவிக்கப்பட்டது. இவ்வாயில் கோபுரத்தில் ராமேசஸின் போர் வெற்றிகள் குறித்த காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த பைலோன்களில் எகிப்திய அரசர்களின் மெய்க்கீர்த்திகள் மற்றும் கோயிலுக்கு அவர்கள் கொடுத்த நன்கொடைகள் பற்றிய விபரங்கள் செதுக்கப்பட்டுள்ளன.


   பைலோனில் உள்ள சித்திரம் - கடேஷ் யுத்தக்காட்சி

 இதன்படி லக்சர் கோயிலின் பைலோனில் ராம்செஸ்  அரசன் நடத்திய மிகவும் பிரசித்தி பெற்ற கடேஷ் யுத்தம் (Battle of Kadesh) பற்றிய விபரங்கள் செதுக்கப்பட்டு இருந்தன. இந்த கடேஷ் யுத்தம் பற்றிய சம்பவங்கள் மிகவும் தெளிவாக வரலாற்றில் பதியப்பட்டிருக்கிறது.  அத்துடன் எகிப்திய பாரோக்கள் கடவுளுக்கு தானம் வழங்குதல், பலியிடல், தூபங்காட்டல் ஆகிய காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது. லக்சர் கோயிலின் பைலோனில் செதுக்கப்பட்டவை தற்போது காலத்தால் அழிந்து விட்டது. பிற்காலத்திலும், குறிப்பாக, நூபிய மற்றும் எதியோப்பிய மரபுகளைச் சேர்ந்த அரசர்களும் தமது வெற்றிகளை இதிலே பதிவு செய்துள்ளனர்.

    இந்த பைலோனுக்கு முன்பாக கருங்கல்லில் 25 மீட்டர் உயரமான ராம்சியின் இராட்த உருவச் சிலைகள் உள்ளன. கோயிலை பாரோ அரசர்கள் காவல் காப்பதன் குறியீடாக கொள்ளப்படுகிறது. முன்னர் இந்த நுழைவாயிலின் இரு பக்கங்களிலும் ராமேசஸின் மிகப் பெரிய ஆறு சிலைகள் அமைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இவற்றுள் நான்கு இருந்த நிலையிலும், இரண்டு நின்ற நிலையிலும் அமைந்திருந்தன. இன்று இவற்றுள் இருந்த நிலையிலுள்ள இரண்டு சிலைகள் மட்டுமே தப்பியுள்ளன.

   ஒப்லிஸிஸ் என்னும் தூண்


 

ஒப்லிஸிஸ் என்னும் தூண்

    இளஞ்சிவப்புக் கருங்கல்லினால் அமைந்த 25 மீட்டர் (82 அடி) உயரமான ஒப்லிஸிஸ் என்னும் தூண்கள் (Obelisk) இங்கே காணப்படுகின்றது. இவ் ஒப்லிக்ஸ் தூணில் சிற்ப வேலைப்பாடுகளும் எகிப்திய கைரோகிளிப்ஸ் எழுத்து வடிவங்களையும் காணலாம். தற்போது இதில் ஒரு தூணானது இத்தாலியின் பிளேஸ்டி லா கொன்கோர்டே என்னும் சதுக்கத்தில் நிறுவப்பட்டது. அத்தூணானது இன்றும் அங்கேயே காணப்படுகின்றது. 

    இத்தாலியின் சதுக்கத்தில் நிறுவப்பட்ட  மற்றைய தூண்

    இக்கோபுர நுழைவாயில் உள்ளே அமைந்துள்ள தூண் வரிசைகளால் சூழப்பட்ட முற்றம் ஒன்றுக்கு இட்டுச் செல்கிறது. இது விசாலமான திறந்த மைதானம். இப் பகுதியும் இரண்டாம் ராமேசஸ் காலத்தில் கட்டப்பட்டதே. இதை ராம்சியின் மைதானம் என்கிறர்கள். இதைச் சுற்றி அழகான பைபிரஸ் தாவர வடிவ போதிகைத் தூண்கள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளது.

    திறந்த வெளிப்பகுதியும், நுழைவாயிலும் கோயிலின் ஏனைய பகுதிகளிலிருந்து வேறுபட்ட கோணத்தில் அமைந்திருப்பதைக் காணலாம். இம் முற்றத்துக்கு அப்பால், தூண் வரிசைகளோடு கூடிய ஊர்வலப் பாதை உள்ளது. மூன்றாம் அமென்ஹோட்டெப் (Amenhotep 111) என்பவனால் கட்டப்பட்ட இப்பாதை 100 மீட்டர் (328 அடி) நீளம் கொண்டது. இப்பாதை 14 பப்பிரஸ் தாவர வடிவப் போதிகைகளைக் கொண்ட தூண் வரிசைகளைக் கொண்டது.

    சுவரில் அமைந்துள்ள அலங்காரச் சித்திரங்களில் ஒப்பெட் விழாவின் பல்வேறு கட்டங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கர்னாக்கில் நடைபெறும் பலிகள், அமொன் கடவுள் லக்சோருக்கு வருதல், மீண்டும் திரும்பிச் செல்லுதல் ஆகிய காட்சிகள் இவற்றுள் அடங்கும்.

    அடுத்து ஹைப்போஸ்டைல் மண்டபம்  உள்ளது. பைபிரஸ் புல்லின் வடிவிலான தண்டுகள் கொண்ட எட்டு தூண்கள் நான்கு வரிசைகளில் அமைக்கப்பட்டுள்ளது.


        ஹைப்போஸ்டைல் மண்டபத்திற்கு அப்பால் பல சிறிய அறைகள் உள்ளன. இந்த பகுதியில் இன்னும் சில அசல் கூரையுடன், கோவிலின் மிகவும் புனிதமான பகுதியான மூலஸ்தானத்தில் ஆமுன், முட், கொன்சு ஆகிய தெய்வங்களின் கோயில் உள்ளது. பழையகாலத்தில் விக்கிரகங்கள் வெண்கலத்திலோ தங்கத்திலோ அமைந்திருக்கும். ஆமோன் கடவுளின் பொற்கல உறைந்த சிலை வைக்கப்பட்டிருந்துள்ளது.

      கோயிலின் உட்பகுதி ஆமன்ஹோரப்111 காலத்தில் கட்டப்பட்டாலும் கட்டிடத்தின் உட்பகுதி அலங்கரிக்கப்பட்டது அவரது பேரனான துட்டன்காமன்(Tutankhamun) காலத்திலாகும்.

அபூசிம்பல் ஆலயம்

        கி.மு 13ம் நூற்றாண்டு காலப்பகுதியில் 2ம் ராம்ஸிஸ் (Ramesses 11) பாரோ மன்னனால் இவ்வாலயம் அமைக்கப்பட்டது. கி.மு 1279 – 1213 ஆண்டுகளுக்கிடையே ராம்ஸிஸ் தனது பராக்கிரமத்தையும் ஆன்மீக வெளிப்பாட்டையும் எடுத்துக்காட்ட சூரியக்கடவுளுக்காக கட்டப்பட்ட பிரமாண்ட ஆலயமாகும். இயற்கையாக அமையப் பெற்ற பாறைக் குன்றைக் குடைந்து உருவாக்கப்பட்ட மிகப்பெரிய குடைவரைக் கோயில் இதுவாகும். ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு முன் இயற்கையான பாறைக் குன்றுகளை 200 அடி நீளத்திற்கு குடைந்து பிரமிக்கத்தக்க முறையில் பேரெழிலுடன் செதுக்கப்பட்டுள்ளது. அபுசிம்பல் ஆலயம் போன்று உலகில் வேறு எந்த நாட்டிலும் காண முடியாது.

              அபு சிம்பல் ஆலயமானது கி.மு.13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ராம்சேஸ் தன்னுடைய போர் வெற்றியைக் குறிக்கும் வகையில் தனக்கும், தன் மனைவி, ராணி நெபர்டாரிக்கும் இந்தக் கோவிலைக் கட்டினார். எகிப்தில் அதிக அளவு வெளிநாட்டுப் பயணிகளைக் கவரக்கூடிய இடமாக அபுசிம்பல் இருக்கிறது. இந்தக் கோவிலை உருவாக்க இருபதாண்டுகள் ஆனதாகக் கூறப்படுகிறது. கி.மு.1284ல் ஆரம்பித்து கி.மு.1264ல் கட்டி முடிக்கப்பட்டது.

            நவீன சூடான் எல்லையில் உலகப் பெரும் அணைகளில் ஒன்றான அஸ்வான் அணையில் இருந்து 170 மைல் தூரத்தில் அமைந்துள்ளது. மணலால் மூடப்பட்டிருந்த இந்த ஆலயத்தை சுவிட்சிலாந்து தொல்பொருள் நிபுணர் ஜே.எல். புக்கார்ட் (து.டு டீரசநமாயசனவ) 1813ம் ஆண்டு கண்டுபிடித்து வெளிக்கொணர்ந்தார். 

                     சூரியக் கடவுளின் சிற்பம் தலை வாயிலின் மேலே உயரத்தில் செதுக்கப் பட்டிருக்கிறது. பிரமாண்டமான இவ் ஆலயத்தின் உள்ளே நுழையும் போது தொடர்ந்து மூன்று மண்டபங்களைக் கடந்து செல்ல வேண்டும். ஆலயமானது 180 அடி நீளமும் 124அடி அகலமும் 80 அடி உயரம் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டது.

        ஆலயத்தின் வாசலில் இருபுறமும் 67அடி(20அ) உயரமான ராம்செஸ் மன்னனின் கம்பீரமான அமர்ந்த நிலைச் சிற்பங்கள் வாசலின் இருபுறமும் இவ்விரண்டு சிற்பங்களாக நான்கு அமைக்கப்பட்டுள்ளது. இயல்பான நிலையில் ஆசனத்தில் அமர்ந்த நிலையில் காணப்படும் இச்சிற்பங்கள் இரு கைகளையும் மடியில் வைத்தவாறு நிமிர்ந்த பார்வையுடன் தலையில் கிரீடம் அணிந்து காணப்படுகின்றது. இடது புறத்தில் உள்ள சிற்பங்களில் ஒன்று மட்டும் பூகம்பத்தால் உடைந்து போனதாக அறியப்படுகின்றது. பிரமாண்டமான இச்சிலைகளின் கால்களுக்கிடையே சிறுசிறு சிற்பங்களாக ராம்செஸ்ஸின் தாய் முத்தூய் (ஆரவ-வரல) மனைவி நெபர்ட்ரி (நேகநசவயசi) புதல்வர், புதல்வியர் ஆகியோர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. எகிப்தியக் கலைஞர்கள் தமது கடவுளர்களை அல்லது போரோ அரசர்களை சிற்பமாகவோ சித்திரமாகவோ உருவாக்கும் போது அவர்களைப் பெரியவர்களாகவும் ஏனையவர்களை சிறியவராகவும் காட்டுவது அவர்களின் பண்பாகும். இவற்றிடையே உள்ள சுவர்களில் படைப்புச் செதுக்கல்களாக ராம்செஸ்சின் திருமண நிகழ்ச்சி, போர்முறை, ஹிட்டடஸ் மன்னனின் மகளான பாரோவேந்தன் ராம்செஸ் மன்னன் திருமணம் செய்தல் காட்சி என்பன காணப்படுகின்றது. இச்சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலப்பகுதி மாத்திரம் 120 அடி அகலம் 100 அடி நீளமும் கொண்டது. 

  அபுசிம்பல் ஆலய சிகரத்தின் முகப்பில் வரிசையாக செதுக்கப்பட்டுள்ள ஆபிரிக்க இனக் குரங்குகள் சிற்பங்கள் சூரியோதயத்தை வரவேற்று சிரிப்பது போல் காணப்படுகின்றது. ஆலயக் கதவின் அருகே அரசரின் பெயரை செர்மாத்ரா (ளுநுசு-ஆயு-சுயு) என்று எழுதப்பட்டுள்ளது.

    ஆலய வாசற் படிகளைத் தாண்டி உள்ளே நுழைந்தால், எட்டுத் தூண்கள் தாங்கிய பெரு மண்டபம் ஒன்று எதிர்ப்படுகிறது. தூண்கள் அனைத்தும் தூண்கள் கிடையாது அவைகள் 20 அடி உயரம் கொண்ட ராமேசிஸ் ஐஐ சிலைகள். ழுளசைளை கடவுளின் உருவத்திலிருக்கும் ராமேசிஸ் ஐஐ உருவமானது அறையின் இரண்டுப் பக்கமும் வரிசையாக நின்று கொண்டிருக்கின்றன.   

         இந்த எட்டுத் தூண்களிலும் இரண்டாம் ராம்ஸெஸ்ஸின் சிலைகள் எகிப்திய மரணக் கடவுளான, 'ஓஸிரிஸ் ' ஜழுளசைளை, புழன ழக வாந னுநயனஸ வடிவத்தில் செதுக்கப்பட்டுள்ளன. பாரோ பரம்பரை மன்னர்களின் முதலான தெய்வம் சூரியக் கடவுள் என்று அறியப்படுகிறது. அதுபோல் மன்னர்கள் மரணக் கடவுளான ஓஸிரிஸ் தெய்வத்தின் மீதும் மதிப்பு வைத்திருந்தது காணப்படுகிறது.

                  அந்த எழில் உள் மாளிகைச் சுவர்களில் இரண்டாம் ராம்ஸெஸ் கதேஷ்ப் போரில் ஜடீயவவடந ழள முயனநளாஸ ஹிட்டைட்ஸ் மன்னருடன் புரிந்த போர் ஓவியமாக வரையப் பட்டிருக்கிறது. ராம்ஸெஸ் பெரிய மாளிகையைத் தாண்டி இன்னும் உள்ளே சென்று சிறு மாளிகைக்குள் நுழைந்தால், அங்கே நான்கு சதுரத் தூண்களைக் காணலாம். அந்த சிறு மாளிகை 'கோமகனார் மாளிகை ' ஜர்யடட ழக வாந ழேடிடநளஸ என்று குறிப்பிடப்படுகிறது. இறுதியில் ஆலயத்தின் கர்ப்பக்கிரகத்தில் ரா-ஹாரக்டே, பிரா, அமுன்-ரா, ராம்ஸெஸ் வேந்தர் ஜசுய-ர்யசயமாவந, Pசயா, யுஅரn-சுய, முiபெ சுயஅளநளஸ ஆகிய நான்கு சிலைகள் உள்ளன. 

                அந்த ஆலயம் கிழக்கு நோக்கி நிற்கிறது. கோயில் நேரமைப்பு ஜவுநஅpடந யுடபைnஅநவெஸ முதலில் துல்லியமாக நகர்த்தப் பட்டு, ஆண்டுக்கு இருமுறை சந்திரன் கடக்கும் போது, அதன் ஒளிக்கதிர்கள் கர்ப்பக்கிரகத்தின் உள்ளிருக்கும்; தெய்வங்கள் மீது நேராக விழும்படி நூதனப் பொறியியற் திறமையுடன் கட்டப்பட்டுள்ளது. இது அபூசிம்பள் ஆலயத்தின் சிறப்பாக இருக்கின்றது. இவ்வாறு அமைக்கப்பட்டதன் காரணம், பிப்ரவரி 21 ராம்ஸெஸ் மன்னர் பிறந்த நாள். அடுத்து அக்டோபர் 22 மன்னர் மகுடம் சூடிய நாள் ஆகியனவாகும்.

        நவீன காலத்தில் எகிப்தில் நைல் நதி நீரைத் தேக்கி வைத்து அதனை பொருளாதாரத் தேவைக்குப் பயன்படுத்தும் நோக்குடன் தெற்கு மாநிலமான அஸ்வானில் அணைகட்டும் மிகப்பெரிய திட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் போது நாசர் ஏரியில் நீர்மட்டம் உயர்ந்து ஆலயங்கள் இரண்டும் மூழ்கும் நிலை ஏற்பட்டது. உடனடியாக எகிப்திய அரசாங்கம் அதனைப் பாதுகாக்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் சபையின் விஞ்ஞானக் கலாசாரக் கல்விக் குழுவுடன் தொடர்பு கொண்டு உதவிபெற்றது. அவர்கள் இரு ஆலயங்களையும் நாசர் ஏரிக்கப்பால் 200 மீற்றர் உயரத்தில் இருக்கும் மணற்பாறைக் குன்றின் மீது ஆலயத்தினைப் பிரித்து கொண்டு சென்று அமைத்தனர். ஆலயம் இருந்த இடத்தில் இருந்து 180 மீற்றர் தூரத்தில் மீள அமைக்கப்பட்டது. இச்செயற்றிட்டமானது 1965 முதல் 1968 வரை 40 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் செய்து முடிக்கப்பட்டது. வரலாற்றில் மகத்தான மீள் படைப்பு முயற்சி இதுவாகும்.  

அபூசிம்பல் ஆலயத்திற்கு பக்கத்தில் உள்ள ஹாதர் ஆலயம்

        இரண்டாம் ராம்ஸெஸ் தனக்குக் கட்டிய பேராலயத்திற்கு வடக்கில் சிற்றாலயம் ஒன்றைத்  தன் காதல் எழில் மனைவி நெஃபர்டாரிக்குக் கட்டி அர்ப்பணம் செய்ததாக அறியப்படுகிறது. இது ஹாதர் (ர்யவாழச) என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலய முன் முகப்பில் ஆறு சிலைகள் கம்பீரமாக நிற்கின்றன. அவற்றில் நான்கு சிலைகள் இரண்டாம் ராம்ஸெஸ் மன்னருக்கும், இரண்டு சிலைகள் அவரது மனைவி நெஃபர்டாரிக்கும் செதுக்கப்பட்டிருக்கின்றன. அச்சிற்பங்களின் கீழே அவரது குழந்தைகளின் வடிவச்சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் உள்ளே நுழைந்தால் ஆறு தூண்கள் நிற்கும் ஒரு மாளிகையைக் காணலாம். ஆறு தூண்களிலும் ஹாதுர் பெண் தேவதையின் தலைகள் அமைந்துள்ளன. கிழக்குத் திசையில் உள்ள சுவரில் ராம்ஸெஸ் மன்னன் ரா-ஹாரக்டே, அமுன்-ரா தேவர்கள் முன்பாக எதிரிகளைத் தாக்கி வீழ்த்தும் காட்சி வரையப்பட்டிருக்கிறது. மற்றைய சுவர்களில் ராம்ஸெஸ் மன்னனும், மனைவி நெஃபர்ரியும் தெய்வங்களுக்குப் பூசை செய்து வணங்கும் நிகழ்ச்சி காட்டப்பட்டுள்ளது. உள்ளே கர்ப்பக்கிரகத்தில் மாபெரும் ஹாதுர் பெண் தெய்வச்சிலைக் காண்போரைப் பிரமிக்க வைக்கிறது. அதன் மேலே தான் மனிதன் செதுக்கிப் படைத்த, மிக உயர்ந்த செயற்கையான வளை கோபுரம் அற்புதமாய் அமைக்கப்பட்டுள்ளது.

        இவ்வாலயங்கள் இரண்டும் சூடான் எல்லையில் அமைந்துள்ளதால் பல நூற்றாண்டுகள் இருந்துள்ளது. 1817இல் இரண்டையும் இத்தாலியைச் சேர்ந்த எகிப்திய புதைபொருள் ஆய்வாளர் கியோவன்னி பாட்டிஸ்டா பெல்ஸானி (புழைஎயnni டீயவளைளவய டீநடணழni) என்பவர் இவற்றைக் கண்டுபிடித்து ஆராய்ந்து உலகிற்கு தெரியப்படுத்தினார்.  

கர்ணாக் தேவாலயம்

        எகிப்து நாட்டில் உள்ள லக்சர் நகரத்துக்கு அருகே நைல் நதி ஓரமாக இந்த கோயில் அமைந்துள்ளது. பழங்கால கோவில்களில் கம்போடியாவில் உள்ள ஆங்கோர்வாட் கோயில்தான் உலகிலேயே பெரியதாகும். இதில் 2-வது பெரிய கோயிலாக கர்னக் கோயில் உள்ளது. இந்த கோவில் மொத்தம் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 1.50 கிலோ மீட்டர் நீளம், 0.8 கிலோ மீட்டர் அகலத்தில் மிக பிரமாண்டமாக இருக்கிறது. 
        கர்னக் என்பது, எகிப்து நாட்டில் உள்ள ஒரு சிறிய ஊர் ஆகும். நைல் நதியின் கரையில் அமைந்துள்ள இவ்வூர் லக்சோரில் இருந்து 2.5 கி.மீ தொலைவில் உள்ளது. மிகப் பழமையான எகிப்தியக் கோயில்கள் அமைந்துள்ளதே இவ்வூர் முக்கியத்துவம் பெறக் காரணமாகும்.
    கர்னாக் ஒரு ஊர் என்பதிலும், ஒரு கோயில் தொகுதியாகவே (உழஅpடநஒ) பெரிதும் காணப்படுகிறது. கர்னக் கோயில் பகுதியானது இன்று பாரிய திறந்தவெளி அருங்காட்சியகம் என்பதுடன், உலகின் மிகப் பெரிய பண்டைய சமயம் சார்ந்த இடமாகவும் திகழ்கின்றது. எகிப்தில் கெய்ரோவுக்கு அண்மையில் உள்ள கீசா பிரமிட்டுகளுக்கு அடுத்தபடியாக, கூடுதலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்ற இடமும் இதுவேயாகும்.
    கோவில் அமைந்துள்ள பகுதி முன்பு தேபஸ் என்று அழைக்கப்பட்டது. இது எகிப்தின் தலைநகரமாகவும் இருந்தது. கர்னக் கோயில் 5ம் அம்னோசிஸ் மன்னனால் அமுன் தெய்வத்திற்கு கட்டப்பட்டது. 30ஹெக்ரேயர் நிலப்பரப்பில் பரந்து நிர்மாணிக்கப்பட்டது. இவ்வளாகத்தில் வலது புறம் மொண்டு என்னும் யுத்த அதிபதி கடவுளுக்கும் மற்றைய பகுதிகள் அமுன் கடவுளின் மனைவியாகிய முத் என்னும் கடவுளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.  
               இப்பகுதியின் கட்டுமானப் பணிகள் கி.மு 16 ஆம் நூற்றாண்டில் தொடங்கியதாகக் கணிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து 30 பாரோக்கள் (phயசயழாள) இங்கே கட்டிடங்களைக் கட்டியுள்ளார்கள். இதனால் இக் கட்டிடத் தொகுதி, வேறு எங்கும் காணப்படாத வகையில், பாரிய அளவு கொண்டதாகவும், சிக்கலானதாகவும், பல்வகைமை கொண்டதாகவும் அமைந்து காணப்படுகின்றது. இதனால், கர்னக் பகுதியிலுள்ள கோயில்களின் மிக நீண்ட கால வளர்ச்சியும், பயன்பாடும் அதனை எகிப்தில் உள்ள ஏனைய தொல்லியல் மற்றும் கோயில் களங்களிலிருந்து வேறுபடுத்துகின்றது.
இது நான்கு பகுதிகளைக் கொண்டது. இவற்றுள் அமொன் ரே வளாகம் மட்டுமே சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் பார்ப்பதற்காக விடப்பட்டுள்ளது. இதுவே முக்கியமான கோயில் பகுதியும், பெரியதும் ஆகும். ஏனைய மூன்று பகுதிகளுக்குள்ளும் பொதுமக்கள் உட்செல்ல முடியாது.
    பண்டைய எகிப்தியர்கள் ஆமுன், முட், கோன்சு ஆகிய தெய்வங்களை வழிபட்டுள்ளனர். இவர்களுக்காக இந்த கோவில் கட்டப்பட்டு உள்ளது. இக்கோவிலின் உட்பகுதியில் முக்கிய பகுதி கடவுள் அமுனுக்கும் தென்பகுதி அவரின் மனைவி கடவுன் மூட்க்கும் மற்றும் ஒரு பகுதி போருக்குக் கடவுளான கோன்சு (முhரளெin) கடவுளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே பலதரப்பட்ட கடவுளின் சிலைகளும் மன்னர் இராணி சிலைகளும் முற்றாகவும் சிதையுண்ட நிலையிலும் காணப்படுகின்றன.
            பிற்காலத்தில் சூரிய கடவுளான ஏடனுக்கு தனிக்கோவில் ஒன்றும் அதே வளாகத்தில் கட்டப்பட்டது. இதனால் ஓரே வளாகத்தில் 4 பிரமாண்ட கோவில்கள் இருக்கின்றன. இதில். ஆமுன் கோவில்தான் மற்ற கோயில்களை விட பெரிய கோயிலாக உள்ளது. அந்த கோயில் மட்டுமே 61 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது. இது தவிர 21 சிறு கோயில்களும் அதே வளாகத்தில் உள்ளன. இடையில் ஏற்பட்ட பூகம்பங்கள், இயற்கை சீற்றங்கள், எதிரி நாடுகள் படையெடுப்பு போன்ற காரணங்களால் கோயிலின் பல பகுதிகள் சேதம் அடைந்து இருந்தாலும், பெரும்பாலான வளாகம் அதே கம்பீரத்துடன் உள்ளது. 
மேற்குறிப்பிட்ட நான்கு முக்கிய பகுதிகளையும் சூழவுள்ள மதிலுக்கு வெளியேயும் சில சிறிய கோயில்களும், வாசல்களின் இருபுறமும் ஆமொன் எனப்படும் கடவுளின் சின்னமாகிய ஆட்டுத்தலைச் சிற்ப உருவங்களின் வரிசைகளைக் கொண்ட பாதைகளும் காணப்படுகின்றன. இப்பாதைகள், மூத் வளாகம் (Pசநஉinஉவ ழக ஆரவ), அமொன் ரே வளாகம், லக்சோர் கோயில் என்பவற்றை இணைக்கின்றன.
             தற்போது இந்த கோயிலில் வழிபாடு எதும் இல்லை. திறந்தவெளி அருங்காட்சியகமாக கோவில் மாற்றப்பட்டு உள்ளது. இன்றைக்கு எகிப்து நாட்டை சுற்றி பார்க்கவரும் சுற்றுலா பயணிகளில் முக்கிய சுற்றுலா பட்டியலிலும் கர்னக் கோயில் இடம் பெறுகிறது. எகிப்தில் உள்ள கீசா பிரமீடை அடுத்து அதிக சுற்றுலா பயணிகள் இந்த கோவிலுக்கு தான் வருகின்றனர்.
     கர்னாகில் நுழையும் போது இருபக்கமும் வரிசையாய் அமர்ந்திருந்த மாட்டுத்தலையுடன் கூடிய ஸ்பினிக் சிற்பங்கள் வரவேற்று நின்றன. பிரம்மாண்டமான முதல் மதிலுக்கு அடுத்து மிக 15மீற்றர் உயரமான பெரிய இரண்டாம் ரம்செஸ் மன்னன் சிலையிருக்கும் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்துக்கு அடுத்துள்ள பகுதிகளுக்கு பரோக்களும் அர்ச்சகர்க்களும் மட்டும் தான் முன்பு செல்ல முடியுமாம். இரண்டாம் மதிழுக்கு அடுத்து மிகப்பெரிய தூண்கள் வழியின் இரு புறங்களிலும் அணிவகுத்திருப்பதை பார்க்கலாம். இரண்டு மிக பெரிய ஒப்பிலிஸ்குகள் மூன்றாம் மதிழுக்கு அடுத்து உயர்ந்து நிற்கின்றன. இதே மாதிரி ஒப்பிலிஸ்குகளை பாரிஸிலும் வாஸிங்டனிலும் தற்போது பார்க்கலாம். 
             இங்கே இருக்கும் ஆமுன் ரே (யுஅரn சுந) கோவில் எகிப்தின் மற்ற எல்லாக் கோவில்களையும் விட மிகப் பெரியது. ஆமுன் ரே எகிப்தியரின் முழுமுதற் கடவுள். நாட்டையும், மன்னர்களையும், மக்களையும், எல்லாத் துன்பங்களிலிருந்தும், எப்போதும் காப்பாற்றுபவர் என்பது பொது நம்பிக்கை.
    ஆமுன் ரே கோவிலில் இருக்கும், கி.மு. 14ம் நூற்றாண்டில், இரண்டாம் ராம்சேஸ் மன்னரால் கட்டப்பட்ட மண்டபமே முக்கிய அம்சம். கர்னக் கோவிலில் 56 ஆயிரம் சதுர அடி பிரமாண்ட மண்டபம் ஒன்று உள்ளது. உலகில் உள்ள பழங்கால மண்டபங்களில் இதுதான் மிகப் பெரியதாகும். இந்த மண்டபத்தை விசாலமான பப்பிரஸ் மரத்தின் மாதிரி அமைப்பு கொண்ட 134 கற்தூண்கள் அமைத்து அதில் நிறுவி உள்ளனர். உலகின் மிகப்பெரிய தூண்கள் இங்குதான் காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 
    இக்கோவில் மண்டபம் 'ஹைப்போ' என்னும் வித்தியாசமான கட்டடக் கலைப் பாணியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. தாங்கும் வளைவுகள் இல்லாமல், வரிசையாகத் தூண்களை நிறுவி, அவற்றின்மேல் தட்டையான கூரை அமைக்கும் முறையே இதுவாகும். 16 வரிசைகளில், 134 தூண்கள் அரங்கத்தைத் தாங்கி நிற்கின்றன. இவை ஒவ்வொன்றின் சுற்றளவு 10 அடி. 122 தூண்களின் உயரம்  33 அடி: எஞ்சிய 12 தூண்களின் உயரம் 70 அடி.இம்மண்டபத்தில் மத்தியில் உள்ள சோடித் தூண்கள் உயரமாகவும் இரு பக்கங்களிலும் உள்ள சோடித் தூண்கள் சிறிதாகவும் காணப்படும். இதன் மேல் வளைகள் இட்டு கூரை நிர்மாணிக்கப்படும். இம்மண்டபத்தின் நீளம் 102m ஆகவும், அகலம் 52m ஆகவும் காணப்படுகின்றது.    
    இவ்வளவு எடை கொண்ட தூணை எப்படித்தான் பொருத்தினார்களோ! என்பது மிகப்பெரிய ஆச்சரியமான விஷயமாகவே உள்ளது. தூண்களின் மேல் பகுதியில், வேறு தூண்களை அமைத்து ஒன்றோடு ஒன்று பொருத்தி உள்ளனர். இந்த தூண்களை வளைவாக வடிவமைத்து இருக்கிறார்கள். எப்படி இவ்வளவு கச்சிதமான வளைவு தூண்களை செதுக்கினார்கள் என்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. 
    தூண்களின் தாங்கு திறனையும் துல்லியமாக கணக்கிட்டு அமைத்து இருப்பது அந்த காலத்திலேயே எகிப்து கட்டிடக்கலை வல்லுனர்கள் நிபுணத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. இதே போல் மேலும் 16 அரங்கங்களும் கோவில் வளாகத்தில் உள்ளன. மேலும் இந்த கோவிலில் 97 அடி உயரத்தில் ஓரே கல்லில் ஆன ராட்சத தூண் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த துணின் எடை 323டன். இத்தூண்களில் தாமரைப் பூ வடிவ புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. 
     இவ்வளவு பெரிய தூணை 161 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கல்குவாரியில் இருந்து வெட்டி எடுத்து வந்துள்ளனர். எந்த நவீன தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் இவ்வளவு அதிக எடை கொண்ட தூணை எப்படி இங்கு கொண்டுவந்து சேர்த்தார்களோ தெரிய வில்லை. இதே எடை கொண்ட மேலும் 4 தூண்களும் முந்தைய காலத்தில் அங்கு இருந்துள்ளன.
    கி.பி.338-ம் ஆண்டில் ரோம் மன்னன் கான்ஸ்டாடின் இந்த பகுதியை கைப்பற்றினான். அவன் இதில் ஒரு தூணை ரோம் நகருக்கு கொண்டுவர தனது படைக்கு உத்தரவிட்டான். எனவே அந்த தூணை பெயர்த்து எடுத்து கொண்டு சென்றனர். இவ்வளவு பெரிய தூணை எடுத்து செல்ல மிகவும் கஷ்டப்பட்டனர். பெரும் சிரமத்துக்கு பிறகு ஆலெக்சாண்டிரியா நகரம் வரையே அந்த தூணை அவர்களால் கொண்டு செல்ல முடிந்தது. 
    பின்னர் மீண்டும் கடும் முயற்சி செய்து ரோம் நகருக்கு எடுத்து சென்றனர். ஆனால், இதற்கு 26 வருடங்கள் ஆகி இருந்தன. தற்போது கோவில் வளாகத்தில் ஒரு தூண் மட்டுமே உள்ளது. மற்ற 2 தூண்கள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை. கறுப்பு கிரானைட் கற்களால் உருவாக்கப்பட்ட 600 கடவுள் சிலைகள் கோவிலில் உள்ளன. இவை தவிர 4500 சிலைகள் கோவில் வளாகம் முழுவதும் உள்ளன. கோவில் சுவர்களில் ஏராளமான சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளன.
    10.5 மீட்டர் உயரம் கொண்ட கடவுள் சிலை ஒன்றும் பிரமாண்டமாக இருக்கிறது. கோவில் வளாகத்திலேயே பெரிய குளம் ஒன்றும் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த குளத்தை சுற்றி பூந்தோட்டங்கள் இருந்தன. மேலும் கோவில் பூசாரிகள் குடியிருப்புகளும் இந்த குளத்தைச் சுற்றி அமைக்கப்பட்டு இருந்தன. வளாகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட பிரமாண்ட அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
    இந்தகோவில் இவ்வளவு பிரமாண்டமாக அமைந்ததற்கு முக்கிய காரணம் ஒன்று உள்ளது. ஏனென்றால், இந்த கோவில் சில ஆண்டுகளில் கட்டப்பட்டது அல்ல. பல நூற்றாண்டுகள் கொஞ்சம், கொஞ்சமாக தொடர்ந்து கட்டப்பட்டது.
    தேபஸை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த 1-ம் செனுஸ்ட்ரட் என்ற மன்னன் கி.மு.1950-ம் ஆண்டளவில் கோவிலை கட்டத் தொடங்கினான். அவனுக்கு பிறகு வந்த 30 மன்னர்கள் கோவிலை தொடர்ந்து விரிவாக்கம் செய்து கட்டினார்கள். 1-ம் துத்மோசிஸ், 1-ம் சேத்தி, 2-ம் ராம்சஸ் ஆகிய மன்னர்கள் கோவில் கட்டுமான பணிகளில் அதிக அக்கறை எடுத்து மேலும் பல கட்டிடங்களை கட்டினார்கள்.
     ஒருவர் கட்டிய கட்டிடத்தை மற்றவர் இடித்து விட்டு கட்டிய சம்பவம் அடிக்கடி நடந்தன. ஹேட்சபஸ்ட் என்ற பெண் அரசி கட்டிய பெரும்பாலான கட்டிடங்களை அதற்கு பிறகு வந்த மன்னர் இடித்து தள்ளிவிட்டு புதிய கட்டிடத்தை கட்டினார். இந்த கோவிலில் முக்கிய தெய்வமாக அமுன் இருந்து வந்த நிலையில், அக்னேடன் என்ற மன்னன் சூரிய கடவுளான ஏடனுக்கு முக்கியத்துவம் வழங்கி அவருக்கு பிரமாண்ட கோவிலை கட்டினான். 
    ஆனால், அவனுக்கு பிறகு வந்த மன்னர் அந்த கோவிலில் பெரும் பகுதியை இடித்து விட்டு மீண்டும் அமுன் கடவுளுக்கே முக்கியத்துவம் கொடுத்தார். கி.மு 360-ம் ஆண்டு வாக்கில் ஆட்சியில் இருந்த எகிப்து மன்னன் 1-ம் நெக்டனவோ காலம் வரை தொடர்ந்து கட்டுமான பணிகள் நடந்து கொண்டே இருந்தன. அதன் பிறகு கிரேக்கத்தை சேர்ந்த தாலமி வம்சத்தினர் அந்த பகுதியை கைப்பற்றி கொண்டனர். அதன் பிறகுதான் கோவில் கட்டுமான பணிகள் நின்றன. 
    அதாவது கோவில் கட்டுமான பணிகள் 1600 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்தன. உலகில் வேறு எந்த கட்டிடமும் இவ்வளவு நீண்ட காலமாக கட்டப்பட்டது இல்லை. கி.பி 323-ம் ஆண்டில் கிறிஸ்தவர்கள் இந்த பகுதியை கைப்பற்றினார்கள். அதற்கு முன்புவரை இங்கு வழிபாடு நடந்து வந்தது. கிறிஸ்தவர்கள் கைப்பற்றிய பிறகு வழிபாடுகளுக்கு தடை விதித்து விட்டனர். அவர்கள் இதே வளாகத்தில் 4 கிறிஸ்தவ கோவிலை கட்டினார்கள். அந்த கோவில்களில் கிறிஸ்தவ வழிபாடுகள் நடந்தன.
    இடையில் பல மன்னர்கள் அந்த இடங்களை கைப்பற்றிய போதெல்லாம் கட்டிடத்தின் பல பகுதிகளை இடித்து தள்ளி விட்டனர். ஆனாலும் கூட மீதம் இருக்கும் கட்டிடங்களும் பிரபிப்பை ஏற்படுத்தும் வகையிலே இருக்கின்றன. கர்னக் கோவில் அந்த பகுதி மக்களின் புனித தலமாகவும் இருந்துள்ளது. கோவிலுக்கு மக்கள் புனித யாத்திரை வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
கோவிலின் சுவர்களில் எல்லாம், அந்த காலத்து மன்னர்கள் எதிரிகளை கொன்று குவிக்கும் வீரதீர போர் காட்சிகள், பிரம்மாண்ட திருவிழா காட்சிகள், 5ம் அம்னோசிஸ் அரசனுடன் வேறு சிலர் சமயக் கலந்துரையாடலில் ஈடுபடும் காட்சி போன்றன தான் நிறைந்து வழிகின்றன. இருண்ட இரவில் நிலவிற்கடியில், ஒளிரும் தீபந்தங்கள், கூச்சலிடும் மக்கள் கூட்டம், இசைக்கும் வாத்தியங்களுக்கெற்ப ஓதும் அர்ச்ச்கர்கள், கர்வத்தொடு விழாவை மகிழும் மன்னன் போன்ற காட்சிகளைப் பார்க்கும் போதே மெய்சிலிர்க்க வைக்கிறது. இது போல எத்தனையோ விழாக்களின் நினைவுகளை இந்த கோவிலின் தூண்களும் சுவர்களும் இன்றும் அசை போட்டு கொண்டிருக்கிறது.  




கருத்துகள்