
பனையோலைக் கைத்தொழில் பற்றிய வீடியோ அலகினைப் பார்க்க கீழே கிளிக் செய்யுங்கள்.
- ஒரு வித்திலைத் தாவரமாகிய பனைமரத்தின் உச்சி முதல் வேர் வரையிலான எல்லாப் பகுதிகளும் பல்வேறு ஆக்கங்களுக்காகப் பயன்படுவனவாகும்.
- பனை மரத்திலிருந்து பெறும் ஓலையே இவ்வாக்கங்களுக்காகப் பயன்படும் பிரதானமான ஊடகமாகும்.
- பனை மரங்கள் பரவலாகக் காணப்படும் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலேயே குறிப்பாக பனையோலைக் கைத்தொழில் பரம்பிக் காணப்படுகின்றது.
• பனை மரத்திலிருந்து பெறும் ஓலையே இவ்வாக்கங்களுக்காகப் பயன்படும் பிரதானமான ஊடகமாகும்.
• பனை மரங்கள் பரவலாகக் காணப்படும் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலேயே குறிப்பாக பனையோலைக் கைத்தொழில் பரம்பிக் காணப்படுகின்றது.
பனையோலையினால் ஆக்கப்படும் பாவனைப் பொருள்களைப் பின்வருமாறு வகைப்படுத்திக் காட்டலாம்.
1. பாய், பெட்டி, கடகம் (பெரிய பெட்டி)
2. சுளகு - உமல், கொத்து மூடல்
3. குட்டான் (பனங்கருப்பட்டி இடும் சிறு பெட்டி)
4. அலங்காரப் பொருள் - சுவர் அலங்கரிப்பு
பாய்கள்
பனையோலைப் பாய் பின்னுவதில் பெண்களே பெருமளவில் ஈடுபடுவர். பனையோலைப் பாய்கள் பல்வகைப்படும்.
விவசாய நடவடிக்கைகளின்போது, பயன்படும் பாய் 'கதிர்ப்பாய்' எனப்படும்.
குழந்தைகளை படுக்க வைப்பதற்கு பயன்படும் சிறிய பாய் 'தடுக்கு' எனப்படும்.
நித்திரை செய்வதற்குப் பயன்படுத்தும் பாய் 'படுக்கைப் பாய்' எனப்படும்.
மங்கள நிகழ்வுகளுக்குப் பல வர்ணங்களில் அழகுருக்களால் உருவாக்கப்படும் பாய் 'வர்ணப் பாய்' எனப்படும். தேவைக்கேற்ப பந்திப்பாய், சோற்றுப்பாய், எச்சந்தாங்கிப்பாய் எனப் பல்வகைப்படும்.
பனையோலைப் பாய்களில் காணப்படும் பின்னல் கோலங்கள் பல உள்ளன.
உதாரணம்:
• புளியங்கொட்டை வடிவம் • சதுரவடிவம் • நட்சத்திர வடிவம் • விரிகோண வடிவம் • வைர வடிவம் • புள்ளி வடிவம்
• கேத்திரகணித வடிவங்களின் இணைப்பு மூலம் கிளி, மரம், பூ, பூசாத்திரம் போன்றனவும் உள்ளன.
பாய்களுக்கு நிறமூட்டல்
• ஒரு தேக்கரண்டியளவு சாயத்துடன் ஒரு லீற்றர் நீர் சேர்த்துக் கரைத்து கொதிக்க வைத்து, அதனுள் வெட்டியெடுத்த பனையோலைகளை இட்டு ஐந்து நிமிடம் வரை அவித்தல். பின்னர், தண்ணீரில் கழுவி காற்றில் உலர வைத்தல்.
• பாரம்பரிய முறையில் கோழிச் சாயத்துடன், கறியுப்பும் கடுக்காயும் சேர்த்து அவித்து அதில் பனையோலைகளை அவித்து எடுத்தல்.
• பச்சை, சிவப்பு, நாவல் போன்ற நிறங்களை கறிமஞ்சள் தூளுடன் கலந்து ஏனைய நிறங்களைத் தயாரித்து பனையோலைக்கு நிறமூட்டல்.
பனையோலைக் கைத்தொழில் Pdf File Download....
கருத்துகள்