இலங்கையின் வரலாற்று ரீதியான கட்டிட நிர்மாணங்கள்

   

 ஆசனகர (ஆசனமனை)

வழிபாடு செய்வதற்கு புத்த உருவச்சிலைக்குப் பதிலாக பீடமொன்றை அமைத்து வழிபடும் முறை ஒன்று முற்காலத்தில் காணப்பட்டது. போதிசத்துவர்; ஞானம் பெற்று புத்தர்நிலை அடையும் போது வஜ்ஜிர குறியீடு போட்ட ஆசனத்தில் அமர்ந்திருந்தார். இந்த வச்சிராசனத்தை கல்லாசனமாகச் செய்து வைத்தே இவ்வழிபாடு ஆரம்பமானது. இதற்கு அமைக்கப்பட்ட கட்டிடங்களே ஆசனகர என அழைக்கப்பட்டன. மகாவம்சக்கதைகளிலும் இது பற்றிக் கூறப்படுகின்றது.

இந்தியாவிலும் இலங்கையிலும் புத்த பெருமானைக் குறியீட்டு வடிவில் வணங்கும் முறை காணப்பட்டது. அநுராதபுர யுகத்தின் ஆரம்ப கட்டத்தில் குறியீட்டு வழிபாடுகள் இருந்தன என்பதற்கான சான்றுகள் அகழ்வாராட்சியின் போது கிடைத்துள்ளன. சிலை வணக்கத்திற்கு முன்னர் பௌத்தர்கள் இது போன்ற வணக்க முறைகளில் ஈடுபட்டு வந்தனர் என்று சரித்திரச் சான்றுகள் கூறுகின்றன.  

இவ் ஆசனமனையின் சிதைவுகளை இன்று காணக்கூடிய இடங்களாக பின்வரும் இடங்கள் உள்ளன.

1. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 'புலுகுனாவ'

2. அநுராதபுர மாவட்டத்தில் உள்ள கெபித்தி கொல்லாவ 'ஹல் மில்லாவெட்டிய'





  போதிகர (அரச மரத்தைச் சுற்றியுள்ள மண்டபம்

பௌத்த மக்களினால் வழிபடப்படும் அரச மரத்தைச் சுற்றி காணப்படும் அடைப்பும், அதனைச் சுற்றிச் சிறிய கூரையுடன் கூடிய வலம் வரும் பகுதி (சக்மன்மலுவ) காணப்படும் சுவரும் சேர்த்து போதிகர எனப்படும். கி.மு.3ம் நூற்றாண்டில் பிக்குனி சங்கமித்தை வெள்ளரசு மரக்கிளையை இந்த நாட்டிற்கு கொண்டு வந்தததையடுத்து போதி(வெள்ளரசு) வணக்கம் இங்கே பரம்பியது. குறுகிய காலத்தினுள் வெள்ளரசு மரம் பௌத்த விகாரையில் ஓர் அங்கம் என்னும் நிலையை அடைந்தது.

போதி மரத்தைச்சுற்றி வட்ட வடிவிலோ அல்லது சதுரவடிவிலோ சுவர் அடைக்கப்பட்டது. செங்கட்டியினால் வட்டமாக கட்டப்பட்ட கட்டிடங்களின் நடுவில் போதி மரம் நாட்டப்பட்டுள்ளதை பழைய விகாரைகளில் காணலாம். போதி மரத்தின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் புனிதத்தன்மையைப் பேணவும் இது கட்டப்பட்டதாக இருக்கலாம்.

இச்சுவர்களின் மேல் கற்தூண்களை நிறுத்தி அவற்றின் மேல் சிறிய கூரை அமைக்கப்பட்டு இருந்துள்ளதை பல தொல்லியல் ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றினுள் மலர் பூசை செய்வதற்கு புத்தர்சிலை முதலியனவற்றை வைப்பதற்கும் பெரிய கருங்கற் பீடங்களும் இருந்ததாகக் கூறப்படுகின்றது. அரச மரத்தைச் சுற்றியுள்ள சுவர்> வலம் வரும் பகுதி> அதனைச் சுற்றி நீர் வடிந்தோட அமைக்கப்பட்ட வடிகால் அமைப்புத் தொகுதி என்பன போதிகரவின் பொதுவான கட்டடத்தொகுதி ஆகும். போதிமனையின் நாற்புறத்திலும் நான்கு வாசல்கள் இருந்துள்ளன.

போதி மனையானது தற்போது ஆரம்பத்தில் இருந்த வடிவத்தைப் போன்று இன்றில்லை. ஆனாலும், அநுராதபுரக்காலத்தில் அமைக்கப்பட்ட போதிமனையில் மரத்தின்கிளை கூரைக்கு மேலாக பரந்து செல்லக் கூடியதாகவே போதிமனை அமைக்கப்பட்டன. 

போதிமனையில் தற்போது ஓரளவு நல்லநிலையில் உள்ள போதிமனைகளாக பின்வருவன காணப்படுகின்றன.

1)   குருணாகல நில்லக்கம போதிகர  3) அம்பாந்தோட்ட படிகெம்கல போதிகரய 

2)   பண்டுவஸ்நுவர போதிகரய       4) லாகுகல மங்குல் மகா விகாரை போதிகரய


நில்லக்கம போதிகரய - அநுராதபுரம்

பதானகர

பௌத்த துறவிகள் தனிமையாக இருந்து தியானம் செய்வதற்கென அமைக்கப்பட்ட மண்டபமாகும். கல்லேடுகளில் 'பியன்கல்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனை 'தபோ வன' என்றும் அழைப்பர். காட்டில் வாழும் பிக்குமார் தியானம் செய்வதற்காகவே கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

கல்லால் செய்யப்பட்ட கட்டிலும் தளவிரிப்பும் இவற்றிலே காணப்படும் விசேட அம்சமாகும். இவற்றுடன் உலாவும் பகுதி(சக்மன்மலுவ)> சிற்றறைகள்(குட்டி) கல்லாளான குளங்கள்> மலசலகூடம் என்பனவும் உண்டு. இக் கட்டிடத்தின் அருகில் குளம் அமைக்கப்பட்டிருக்கும். இதில் பௌத்த துறவிகள் நீராடிவிட்டு சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டனர். நீர் அருந்துவதற்கான நீர் நிலையும் உண்டு. பதானகரவைச் சுற்றி அதன் பாதுகாப்பைக் கருதி அமைக்கப்பட்ட அகழியும் காணப்படுகிறது. ஒப்பமாக்கப்பட்ட கற்றகடுகள் பதித்து இது கட்டப்பட்டது.

அநுராதபுர அபயகிரி விகாரைக்குச் சிறிது தூரத்திலே இக் கட்டிடத்தொகுதி ஒன்று உள்ளது. இங்கு சதுர வடிவில் ஆசனமும்> குளிர்ச்சியளிக்க நீர்க்குழாயும் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சலம்கழிக்கும் கல்லில் சிங்கம்> தாமரை மலர்> மகரதோரணச் செதுக்கல்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இப்படியான கட்டிடங்களின் இடிபாடுகள் அநுராதபுர படடிமாரப் பகுதியிலும் றிதிகலை> மானாகந்தை> அறன்கலே ஆகிய இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



உபோசத்தகர (போயாதின கருமங்கள் செய்யும் மண்டபம்)

பிக்குமார் போயாதினக் கருமங்களை நிறைவேற்றுவதற்கான மண்டபம் இதுவாகும். பல்வேறு சமய விவகாரங்கள் பற்றியும் பௌத்த விகாரைகளின் நிர்வாகம் பற்றியும் சாதாரண மக்களும் புத்த பிக்குகளும் கலந்தாலோசிப்பதற்காக கட்டப்பட்ட கட்டிடமாகும். இதற்கு சிறந்த உதாரணமாக ஆயிரம் கால் மண்டபம் என அழைக்கப்படும் லோகமகாபாயவைக் குறிப்பிடலாம். 2ம் நூற்றாண்டில் துட்டகைமுனு மன்னால் கட்டிடவேலைகள் ஆரம்பிக்கப்பட்டு தம்பியான உபதிஸ்ஸ பண்டாரவினால் கட்டி முடிக்கப்பட்டது. இதில் 1600 தூண்கள் காணப்பட்டன. 200 அடி உயரத்தில் 80 மாடிகளைக் கொண்டதாகவும் 100 அறைகள் கொண்டதாகவும் இது கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. 

·       லோவமகாபாய கட்டிடம்;

லோவமகாபாய என்பது பண்டைக்கால இலங்கையின் தலைநகரமான அனுராதபுரத்தில் இருந்த மேன்மையான கட்டிடம் ஆகும். துட்டகைமுனு மன்னனால் அமைக்கப்பட்டது. இது ருவன்வெலிசாய தாதுகோபுரத்துக்கும்> சிறீ மகாபோதி எனப்படும் புனித அரசமரத்துக்கும் இடையில் அமைந்துள்ளது. இதன் கூரை வெண்கலத்தால்(செப்பு) அமைக்கப்பட்டிருந்ததால் இதை பித்தளை மாளிகை> 'லோகப்பிரசாதய' போன்ற பெயர்களாலும் அழைப்பதுண்டு. அக்காலத்தில் இக்கட்டிடத்தில் ஒரு உணவு மண்டபமும்> ஒரு நோன்பு மண்டபமும் இருந்தன. இங்கே> பௌத்த மத குருமார்> போயா நாட்களில் கூடி மத சுலோகங்களை ஓதும் 'சீமமாலக்க' என்னும் மண்டபமும் இருந்தது.

ஒன்பது அடுக்குகளைக் கொண்ட இது நீளம்> அகலம்> உயரம் என்பன சமனான விதத்தில் கட்டப்பட்டதாகும். இக்கட்டிடத்தின் ஒரு பக்கம் 400 அடி (120 மீட்டர்) நீளமானது. இதில் ஒவ்வொன்றிலும் 40 தூண்கள் கொண்ட 40 தூண் வரிசைகள் இருந்தன. இதன்படி இக்கட்டிடம் மொத்தம் 1600 தூண்களைக் கொண்டிருந்தது. இதன் வடிவமைப்பு சுவர்க்கத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது என்றும்> இதைக் கட்ட ஆறு ஆண்டுகள் சென்றன என்றும் பௌத்தர்கள் நம்புகின்றனர். சத்தாதிஸ்ஸ மன்னனின் காலத்தில் இந்தக் கட்டிடம் முற்றாக அழிந்தது. இதன் நடுப்பகுதியில் உள்ள சிறிய கட்டிடம் பிற்காலத்தது. நோன்புக் காலத்தில் மக்கள் கூடுவதற்கான மண்டபமான இது இப்போதும் அதற்காகவே பயன்பட்டு வருகிறது. 


ஐந்தாகர 

ஆராமையில் வசித்த பிக்குமார் ஸ்நானம் செய்வதற்காக உபயோகப்படுத்திய கட்டட அமைப்பாகும். நோயற்று ஆரோக்கியமாக வாழ மூலிகைகளிட்டு சூடான நீராவியை உறிஞ்சவும் சுடுநீரால் ஸ்நானம் செய்யவும் வசதிகளுடன் கூடியவாறு இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சதுர அமைப்புடன் காணப்படும் இக்கட்டிடத்தின் மத்தியில் சதுர அறை ஒன்றும் அதன் மத்தியில் நீர் நிரப்ப ஒரு தடாகமும் காணப்படுகிறது. தடாகத்துடனான இவ்வறை கற்றகடுகளால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அபயகிரிய> மகாவிகாரை> மிகிந்தலை> அரங்கலே போன்ற இடங்களில் ஐந்தாகார காணப்படுகின்றது.







   

கருத்துகள்