பாரம்பரிய அலங்காரங்கள்

பாரம்பரிய அலங்காரம் என்னும் போது இந்த அலங்காரங்கள் குரு தனது சீடனுக்கு பயிற்றுவித்து தொடர்ச்சியாக காலம் காலமாக பேணப்பட்டு வரும் மரபு ரீதியான அலங்காரங்களாக உள்ளன. இந்த அலங்கார வடிவங்கள் யாவும் பௌத்த விகாரைகள், அரசமாளிகைகள், இந்து ஆலயங்கள் போன்றவற்றிலும் கட்டிடங்களையும் பொருட்களையும் அலங்கரிப்பதற்காக தொன்று தொட்டு உபயோகிக்கப்பட்டு வருகின்றது. இந்த அலங்கார வடிவங்களை ஆதாரமாகக் கொண்டு சிற்பிகள், மரவேலைசெய்வோர், உலோகவேலை செய்வோர், பாய் இழைப்போர், தோல் வேலை செய்வோர், தும்புத் தொழில் செய்வோர் இந்த அலங்கார வடிவங்களை அழகுபடுத்துவதற்காக பயன்படுத்துகின்றனர். 

இந்த அலங்கார வேலைப்பாடுகள் பற்றி ரூபாவளிய, வைஜந்திய, சாரிபுத்திரய போன்ற நூல்களில் கூறப்பட்டுள்ளது. இந்த பாரம்பரிய அலங்கார வடிவங்களை கலை விமர்சகரும் ஆய்வாளருமான கலாநிதி ஆனந்தகுமாரசுவாமி அவர்கள் நான்கு பகுதிகளாக் பிரித்துக் காட்டியுள்ளார்.

1.தெய்வீக வடிவம் 2. பிராணிகள் வடிவம் 3. தாவரவடிவம் 4. உயிரற்றவை என 4 பகுதிகளாகப் பிரித்துள்ளார்.


 



அரும்பு

கல்பித்து

தனிச்சுழி




இரட்டைச்சுழி

நீரலை

ஹவடிய / சவடி

குத்திரிக்கன்

தனியிழை


ஈரிழை

வகதெக அலங்காரம்

வகதெக என்பது ஒரு விசேடமான பயிற்சி அலங்காரமாக இருக்கிறது. சித்திரம் வரைபவர்களுக்கு கோடுகளை இலகுவாக வளைத்தும் நேர்த்தியான முறையிலும் வரையக்கூடிய திறன் பெற்றிருக்க வேண்டும் இதற்காக சிங்கள சித்திர ஆசிரியர்கள் தம்மிடம் முதன்முறையாக சித்திரம் கற்கவரும் மாணவனுக்கு கோட்டுப் பயிற்சி அல்லது இரேகைப் பயிற்சி வழங்குவதற்காக முதன்முதலாக வரைந்து காட்டும் அடிப்படை அலங்கார அலகாக வகதெக அலங்காரம் காணப்படுகிறது. இந்த அலங்காரத்தைப் பார்த்தீர்களேயானால் ஒரு புள்ளியை இணைத்து இரு வளைவுகளை அமைப்பதாக இந்த அலங்கார அமைப்பு காணப்படுகிறது. இந்த வகதெக அலங்காரத்தின் அடுத்தபடியான அலங்காரமே திரிங்கிதலை அலங்காரம் ஆகும்.   




சப்புமலர்



























பாரம்பரிய அலங்காரம் பற்றிய வீடியோ பாட அலகு கீழே கிளிக் செய்யுங்கள்

கருத்துகள்