மோடிப்படுத்தப்பட்ட நாடகம்


மோடிப்படுத்தப்பட்ட நாடகங்கள்

நாடகங்கள் இருவகைப்படும். 

1. நாடக தர்மம்

2. உலக தர்மம்

இங்கு மோடிப்படுத்தப்பட்ட நாடகங்கள் நாடக தர்ம வகைக்குள் அடங்கும்.

மோடிப்படுத்தப்பட்ட நாடகங்களின் இயல்புகள்

நாடகத்தின் அனைத்து உரையாடல்களும் பாடல் வடிவில் அமைந்தவையாகக் காணப்படும்.

இராகத்துடனான உரையாடல்களாகக் காணப்படும்.

நாடகத்தின் சகல அசைவுகளும் நடைகளும் இசைக்கேற்றவாறு சந்தத்துடன் அமைந்திருக்கும்.

இலங்கையின் மோடிப்படுத்தப்பட்ட நாடகங்களுக்கு உதாரணம்:

• மனமே

• சிங்கபாகு

• பெரஹண்ட

மோடிப்படுத்தப்பட்ட நாடகங்களின் பின்ணணி வடிவமைப்பு:

• எளிமையாகவும் அலங்காரமின்றியும் காணப்படும்.

• சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான பின்ணணி காட்சிப்படுத்தப்படும்.

• சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான பின்ணணிப் பாடலும் பாடப்படும்.

ஒப்பனை செய்தல் (வேடம் பூணுதல்)

அக்கதாபாத்திரத்திற்கு பொருத்தமான வகையில் அதன் தன்மை, குணவியல்புகளை வெளிப்படுத்த,

• முக்திற்கு சாயம் பூசுதல்

• வேறு அடையாளங்களை வரைதல்

• மீசை, தாடி, கேசம் ஆகியவற்றை ஒட்டுதல்

உதாரணம்: சிங்கபாகு நாடகம் - சிங்கத்தின் கதாபாத்திரம்,

            மனமே நாடகம் - வேட அரசன்

அரங்கப் பொருட்கள் 

• கதாபாத்திரங்கள் நாடகத்தில் தமது வகிபாகத்தை திறமையாக  வெளிப்படுத்த இந்த அரங்கப் பொருட்கள் அத்தியசியமானவை.
• இவை நாடகத்திற்கு அழகையும் கொடுக்கிறது.

அரங்கப் பொருட்களுக்கு உதாரணமாக: வாள், ஈட்டி, செங்கோல் 

அரங்க ஆடை அணிகள்

கதாபாத்திரங்களை மெருகூட்டவும் அழகுபடுத்தவும் ஆடை, அணிகலங்கள் பெரும்பங்காற்றுகின்றன.

அரங்க ஆடை அணிகள் உதாரணம்: 
ஆடைகள், கிரீடம், நெற்றிப்பட்டம், அட்டியல், மாலை, தலைப்பாகை, வளையல், தோடு, மோதிரம், சலங்கை, கொலுசு, சப்பாத்து.






கருத்துகள்