பௌத்த,இந்து சிற்பங்களின் ஆசனம், ஆசனமுறை, முத்திரை

 ஆசனங்கள்

ஆசனங்கள் என்பது புத்தர் சிலையானது அமர்ந்திருக்கும் பீடம் அல்லது இருகையே ஆசனம் எனப்படுகிறது. இங்கு இரண்டு வகையான ஆசனங்கள் காணப்படுகிறது. 

1. பத்மாசனம்

2. வஜ்ராசனம்.

பத்மாசனம்

பத்மம் என்றால் தாமரை. அமர்ந்துள்ள பீடத்தில் தாமரை இதழ் அலங்காரம் செதுக்கப்பட்டுள்ளமையால் இதனைப் பத்மாசனம் எனப்படுகிறது. 

வஜ்ராசனம்

 அமர்ந்துள்ள பீடத்தில் வஜ்ரக் குறியீடுகள் செதுக்கப்பட்டுள்ளமையால் வஜ்ஜிராசனம் என அழைக்கப்படுகிறது. 

ஆசனமுறைகள்

அமர்ந்திருக்கும் புத்தர் சிலைகளின் இரு கால் பாதங்களும் பீடத்தின் மேல் எவ்வாறு வைக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்து ஆசனமுறை தீர்மானிக்கப்படுகிறது. அமர்ந்திருக்கும் முறை அல்லது தன்மையியே ஆசனமுறை ஆகும்.

மூன்று விதமான ஆசனமுறைகள் உள்ளது. 

1.வீராசனம் 

2.பத்மாசனம் 

3.பத்ராசனம் என்பனவாகும். 

வீராசனமுறை

இடது பாதத்தின் மீது வலது பாதம் இருக்கும் தன்மையில் அமர்ந்திருப்பதனையே வீராசனம் எனப்படுகிறது. 

பத்மாசனம்

அடிப்பாதங்கள் இரண்டும் மேல் பக்கம் சமமாக இருக்கும் தன்மையில் வைத்து இருத்தல். இரண்டு பாதங்களும் மேலே வானைப் பார்த்தவாறு காணப்படும். 

பத்திராசனம் 

ஆசனம் ஒன்றின் மீது அமர்ந்திருக்கும் நிலையாகும். முழங்கால்கள் இரண்டும் மடித்து உள்ளங்கால்கள் பூமியை தொட்டவாறு அல்லது பதிந்தவாறு காணப்படுகிறது. 

இவற்றில் இலங்கையில் உள்ள எல்லா அமர்ந்த நிலைப் புத்தர்சிலைகளும் வீராசனமுறையில் அமர்ந்துள்;ளது. ஆனால், இந்திய புத்தர்சிலைகள் பெரும்பாலும் பத்மாசன முறையும், குறைந்த எண்ணிக்கையில் பத்திராசன முறையிலுமான புத்தர் சிலைகளுமே காணப்படுகிறது.

முத்திரைகள் 

புத்தர்சிலையின் குணப்பண்புகளையும் அவை எச்சந்தர்பத்தை அல்லது எந்த தருணத்தை வெளிப்படுத்துகின்றது என்பதையும் கைகளைப் பயன்படுத்தி குறியீடுகள் மூலம் காட்டுவதே முத்திரைகள் எனப்படுகிறது.


1. தியான முத்திரை

தியான நிலையில் இருப்பதை எடுத்துக்காட்டும் முத்திரையாகும். இது பயத்தினைப் போக்கி தெளிந்த ஞானத்தை வழங்கும் முத்திரையாக காணப்படுகிறது. 

2. பரதுக்க துக்கித்த முத்திரை

இருகைகளையும் மார்புடன் அணைத்தவாறு காணப்படும். இதன் பொருள் பிறருடைய துக்கத்தில் துக்கித்தல் அல்லது பங்கெடுத்தல் என் ஆய்வாளர் பரணவிதான கூறுகிறார். இதனை அநிமிச லோச்சன பூஜாவ என்றும் கூறுவார்கள். கல்விகாரையில் உள்ள நின்ற நிலைப் புத்தர் வடிவத்தில் இதனைக் காணலாம்.

3. தர்மச்சக்கர முத்திரை 

இது புத்தர் தர்ம உபதேசம் செய்யும் சந்தர்ப்பத்தினை காட்டுவதற்காக பயன்படுத்தப்படும் முத்திரை. புராதன இலங்கை புத்தர்சிலைகளில் காணப்படவில்லை. இந்தியாவின் சாரனாத் புத்தர் சிலையில் தர்மச்சக்கர முத்திரையை காணலாம்.

4. அபய முத்திரை

அபயம் அளித்தலைக் குறியீடாகக் கொண்டது. இது ஆசீர்வதிக்கும் நிலையைக் காட்டுவதால் ஆசீர்வாத முத்திரை எனவும் அழைப்பர். இலங்கையின் அவுக்கண புத்தர்சிலையில் இதனைக் காணலாம்.

5. கடஹ ஹஸ்த முத்திரை

யாதேனும் ஒன்றைப் பிடித்திருக்கும் சந்தர்ப்பத்தில் இந்த முத்திரை பயன்படுத்தப்படுகிறது. மாணவர்களே இதனையும் அவுக்கண புத்தர்சிலையின் இடது கரத்தில் பார்க்கலாம் புத்தர் தனது ஆடையினை தாங்கிப் பிடிப்பதற்கு கடஹ ஹஸ்த முத்திரை உபயோகிக்கப்பட்டுள்ளது. 

6. பூமிஸ்பரிச முத்திரை

பூமியே சாட்சி எனக் கூறுவதாக உள்ளது. கூடுதலாக இந்த முத்திரையை புத்தராக மாறிய சந்தர்ப்பத்தினைக் காட்டுவதற்கு உபயோகிக்கப்படுகிறது. 

7. வரத முத்திரை 

வரம் அளிப்பதைக் குறியீடாகக் காட்டுகிறது. 

8. விதர்க்க முத்திரை

பிரச்சினை ஒன்றைத் தீர்க்கும் சந்தர்ப்பத்தை எடுத்துக்காட்ட உபயோகிக்கப்படுகிறது.

இந்து சிற்பங்களில் உள்ள ஆசனம் ஆசனமுறை முத்திரைகள்


பத்மம், பத்திரம் என இரண்டு ஆசனங்கள் உள்ளன. 
சிலை அமைந்திருக்கும் பீடமே ஆசனம் ஆகும். 

 1. பத்மாசனம் 
தாமரை மலர் இதழ்களால் அலங்கரிக்கப்பட்ட நீள்வட்டவடிவமுடைய ஆசனமாக இருப்பதால் பத்மாசனம் எனப்படுகிறது. 

2. பத்திராசனம் 
இது செவ்வக வடிவையுடைய ஒரு ஆசனமாக உள்ளது. ஒன்றிற்கு மேற்பட்ட சிற்ப வடிவங்களை பீடத்தில் வைக்க இந்த ஆசனம் உபயோகிக்கப்படுகிறது.



இப்பகுதிக்குரிய வீடியோ பாட அலகினை பார்க்க கீழே உள்ள லிங்க்  கிளிக் செய்யுங்கள்:

கருத்துகள்