நவீன சிற்பி ஹென்றிமூர்

கிரேக்க காலம் மற்றும் மறுமலர்ச்சிக்காலத்தில், செதுக்கப்பட்ட அல்லது வடிக்கப்பட்ட மரபு ரீதியான சிற்பக்கலைப் படைப்பிற்குப் பின்னர், புதியதொரு பாணியிலே சிற்பங்களைச் செய்து, உலகை தம் பக்கம் பார்க்க வைத்தவர் ஹென்றிமூர்.

இங்கிலாந்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஹென்றிமூரின் வாழ்க்கைப் பயணம் பல்வேறு சவால்கள் திருப்பங்கள் நிறைந்ததாக காணப்படுகிறது. 

இவருடைய பெற்றோருக்கு ஏழு பிள்ளைகள். அதில் ஹென்றிமூர் ஏழாவது பிள்ளையாகப் பிறந்தார். இவரது தந்தை 'ரேமண்ட் ஸ்பென்சர்மூர்'; ஒரு சுரங்கத் தொழிலாளி. ஆகவே இவரது தந்தை தன்னைப் போல தனது பிள்ளைகளும் சுரங்கத்தினுள் வேலை செய்யும் கடினமான வாழ்க்கை;குள் சென்று விடக்கூடாது என நினைத்து நன்கு படிக்க வைத்தார். ஆனால், ஹென்றி மூர் தனது பதினோராவது வயதிலேயே தான் ஒரு சிற்பியாக வர வேண்டும் என்று விரும்பினார். இதற்கு இவரது பாடசாலையின் கலைப்பிரிவு ஆசிரியரினுடைய பெரும் ஆதரவும் இவருக்கு இருந்தது.

இவர் இளமையிலேயே களிமண்ணில் உருவங்கள் செய்யவும், மரங்களில் கலைப்பொருட்கள் செய்யவும் தொடங்கியிருந்தார். இவை உடலை வருத்திச் செய்யும் கடினமான வேலைகள் என்பதால் இவரது பெற்றோர் இதனை விரும்பவில்லை.

இதனால் இவர் ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சிக்குச் சென்று பயிற்சியை முடித்து ஆரம்பப்பள்ளி ஆசிரியரக பணியற்றினார். இக்காலத்தில் ஏற்பட்ட முதலாம் உலக மகா யுத்த காலத்தில் ஆசிரியர் பணியைவிட்டு இராணுவசேவையில் இணைந்து கொண்டார். இவர் இராணுவத்தில் இருந்த போது லீட்ஸ் என்ற கலைக்கல்லூரியில் கல்வி கற்றார். இக்கல்லூரியில் சிறப்பாக கற்றதால் மேற்படிப்பு கற்பதற்கு புலமைப்பரிசில் கிடைத்தது. ஆகவே, கலை மீது இருந்த ஆர்வம் காரணமாக அந்த உதவித் தொகையில் லண்டனில் உள்ள சுழலயட ஊழடடநபந ழக யுசவ எனும் உயர்கலைக் கல்லூரியிலே தனது கலைக்கல்வியைத் கற்றார்;. தொடர்ந்து ஊhநடளநய ளுஉhழழட ழக யுசவ எனும் கல்வி நிறுவனத்தில் அங்கு சிற்பக்கலை கற்கும் மாணவர்களுக்கு சிற்ப விரிவுரையாளராக கடமையாற்றினார்.

1929 இல் இவர் கலை நிபுணரான இரீனா என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் பிறந்தார். மகள் பிறந்த அக்காலப்பகுதியில்; ஹென்றிமூர் தொடராக தாயும்; குழந்தையுமான பல சிற்பங்களை அதிகம் உருவாக்கினார். அதே வருடத்தில் இவர் முதற்தடவையாக அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கு நேற லுழசமந இல் உள்ள மியூசியம் ஒப் மொடேன் ஆரட் நிலையத்தினால் ஒரு பெரும் கண்காட்சி வைக்கப்பட்டு ஹென்றிமூர் அவர்களைக் கௌரவித்தனர். 1948இல் வெனிசை தளமாகக் கொண்டு இயங்கும் கலை அமைப்பான வெனிஸ் பெனாலி (Venice Biennale) அமைப்பினால்; சர்வதேச சிற்பத்திற்கான பரிசை இவர் பெற்றார். 

இவரது சிற்பங்களும் வரைபடங்களும் உலகம் முழுவதும் உள்ள பல கலை அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களே, இவ்வாறு பல விருதுகளைப் பெற்று உலகப் புகழ்பெற்ற ஹென்றிமூரின் சிற்பங்களில் உள்ள சிறப்பியல்புகள்.

ஐரோப்பியக் நவீனவாத கலைஞர் பிக்காசோவின் ஓவியத்தில் குறிப்பாக ஓவிய உருவமைப்பில் எவ்வாறு வித்தியாமான அருவுருவ வடிவமைப்பை கையாண்டாரோ, அதேபோல் இவர் சிற்பங்களைச் செய்யும் போது சரியான அளவுபிரமாணப்படி இயற்கை உருவங்களாக செய்யாது, உருவத்திற்கு முக்கியத்துவம் வழங்காது அதன் உணர்விற்கு முக்கியமளித்து மனித உருவங்களை அருவுருவங்களாக படைப்பதில் கவனம் செலுத்தினார். 

1. ஹென்றிமூரின் சிற்பங்களின் அடிப்படையான கருப்பொருள் மனித உருவங்கள் ஆகும்.

இந்த மனித உருவச் சிற்பங்களை எளிமையான வடிவிலே செய்தார்;. அதாவது மனித உடலமைப்பினை மிகநுட்பமான அளவுத்திட்டத்தில் செய்யாது, இலகுவான முறையில் உருவங்களைச் செய்தார். 

2. இதற்காக ஹென்றிமூர் தனது சிற்பங்களில் சிற்பங்களுக்குரிய சிற்பக்கோட்பாடுகள் மற்றும் நுட்ப முறைகளைக் கவனத்தில் எடுக்காது. மனித உடலின் இயற்கைத்தோற்றம், அளவுத்திட்டம் ஆகியவற்றில் இருந்து விலகி சிற்பங்களை வடிவமைத்தார். 

3. அடுத்து இவருடைய சிற்பங்களில் உள்ள தனிச்சிறப்பாக அமைவது, பாரிய உடலமைப்பைக் கொண்ட மனித உருவங்களுக்கு, அதன் தலையானது உருவத்திற்கு ஏற்ப அமைக்கப்படாது, சிறியதாகக் அமைப்பது இவரது தனிச்சிறப்பாகும்.

4. இவரால் படைக்கப்படும் சிற்பங்களில் அனேகமானது, பூங்கா போன்ற திறந்தவெளிகளில் வைக்கக்கூடிய பாரியஅளவிலான சிற்பங்களாகவே காணப்படுகிறது. 

5. இப்பாரிய அளவுடைய மனித வடிவச்சிற்பங்கள் பலபகுதித் துண்டுகளாகச் செய்யப்பட்டு பொருத்தி வைக்கப்படுகிறது. இத்துடன் சிற்பங்களில் துளைகளும் காணப்படுகிறது.  

6. சிற்பக்கலைஞர்கள் பாரம்பரியமாக பூங்காச் சிற்பங்களைச் செய்ய கல்லையே பயன்படுத்தினர். ஆனால் ஹென்றிமூர் தனது சிற்பங்கள் திறந்த வெளியில் வைக்கப்படுவதால் வெயில், மழை, காற்று போன்ற இயற்கை காரணிகளால் பாதிப்படையாது இருக்க கல்லுக்குப் பதில் வெண்கலத்தினைத் தெரிவு செய்தார். இவரது பாரிய சிற்பங்கள் வெண்கலத்தில் மட்டுமன்றி மரத்திலும் சலவைக்கல்லிலும் செய்யப்பட்டுள்ளதையும் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.


சாய்துபடுத்திருக்கும் பெண் மற்றும் அரச குடும்பம்  சிற்பம்.


இச்சிற்பம் அருவநிலைசார் அணுகுமுறையில் சாய்ந்து இருப்பது போல் தெரியும் வண்ணம் வடிக்கப்பட்டுள்ளது. வெண்கல ஊடகத்தில் உலோக வார்த்தல் நுட்பமுறையைக் கையாண்டு வடித்துள்ளார். 

 


ஹென்றிமூர் பற்றிய பாடப்பரப்பின் வீடியோ பாட அலகினைப் பார்வையிட கீழே கிளிக் செய்யுங்கள்.

ஹென்றிமூர்

கருத்துகள்