மட்பாண்டக் கைத்தொழில்

உலகில் மிகப் பழமையான நாகரிகங்கள் அனைத்திலும் மட்பாண்டக் கைத்தொழில் இருந்துள்ளது.

இதனால், உலகின் மிகப் பழமையான கைத்தொழிலாக மட்பாண்டக் கைத்தொழில் உள்ளது.

இலங்கையில் மெகலிதிக கால மயானங்களை அண்மித்த பகுதிகளில் கி,மு 600 காலப்பகுதிக்குரிய மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன.

இலங்கையில் யாழ்ப்பாணத்தில் உள்ள கந்தரோடை, அநுராதபுரம், பொலனறுவை, கண்டி போன்ற பிரதேசங்களில் அகழ்வாராய்ச்சியில் பாரம்பரிய மட்பாண்டங்கள் பல கிடைத்துள்ளன.

இலங்கையில் எல்லாப் பிரதேசங்களிலும் கெயோலின் களி, சிவப்புக்களி, மஞ்சள் நிறக்களி போன்றன பயன்படுத்தப்படுகின்றது. 

இவற்றிலே கெயோலின் களியே மிகச் சிறந்தது. 

நிர்மாணிக்கப்படும் பாண்டங்களின் வகைகள்

1. வீட்டுப்பாண்டங்கள்: சட்டி, பானை, குடம், அரிக்கன் சட்டி, பெரிய சட்டி, மூடியுடன் கூடிய சாடி

2. சமயத் தேவைகளுக்கும் விழாக்களுக்கும் உரிய பாண்டங்கள்:  கெண்டி, விளக்கு, சிலம்பு, பாத்திரம், கறுப்புச்சட்டி, சிட்டி

3. கட்டிட நிர்மாணிப்புகளுக்கு : ஓடு, தட்டை ஓடு, பீலி, குழாய்

4. பாரம்பரிய மட்பாண்ட வகைகள் : சட்டி, கோபுரக்கலசம், பூச்சாடி

5. கைத்தொழில் சார்ந்த மட்பாண்டங்கள் : உலைதீச்சட்டி, புடக்குகை, கனலடுப்பு 

மட்பாண்டங்களைத் தயாரிக்கும் முறை:

இதில் மூன்று முறைகள் பயன்படுத்தப்படுகிறது.

1. கைவனை சில்லு

2. கால்வனை சில்லு 

3. களிவளையல்கள், களிதகடுகளைப் பயன்படுத்தி பாண்டங்களைத் தயாரித்தல், அப்புதலும், செதுக்குதல் போன்ற முறைகள்.

கைவனை சில்லு



இலங்கையில் கி.மு 1500ஆம் ஆண்டுகளில் இருந்து கை வனைசில்லுகளைப் பயன்படுத்தப்படுகிறது.

மரபு ரீதியான மட்பாண்டக் கைத்தொழில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. 

வனை சில்லைச் செய்வதற்கு 2அடி அல்லது 2 ½ அடி விட்டமான மரம் அல்லது கருங்கல்லை பயன்படுத்துவர்.

வனைசில்லின் மத்தியில் களிமண்ணை வைத்து கைகளால் வனைசில்லைச் சுற்றி பாண்டங்களைத் தயாரித்துக்கொள்வர்.

வனைசில்லின் இருபுறமும் இருவர் அமர்ந்து ஒருவர் வனைசில்லைச் சுழற்ற மற்றையவர் பொருளைச் செய்வார். 

நிர்மாணிக்கப்படும் பாண்டம் வனைசில்லில் இருந்து பிரித்து எடுப்பதற்கு நூலினை பயன்படுத்தி வெட்டி எடுப்பர். 

ஒப்பமாக்கப்படாது இருக்கும் பாண்டத்தின் அடிப்பகுதியை வட்ட வடிவ கருங்கற் தகடு மற்றும் துடுப்பு என அழைக்கப்படும் பலகை ஒன்றினால் அடிப்பகுதி நிர்மாணிக்கப்படும். 

கால்வனைசில்லு


தற்காலத்தில் இந்த முறை பயன்படுத்தப்படுகிறது.

நின்ற நிலையில் பாண்டத்தைத் தயாரிப்பதற்கு ஏற்றவாறு பாதங்களைப் பயன்படுத்தி வனை சில்லைச் சுழற்ற முடியும்.

இந்த கால்வனை சில்லை மின்சாரத்திலும் இயக்க முடியும். 

கால்வனைசில்லின் மூலம் பூச்சாடி, சிறிய விளக்கு, கூசாக்கள், சிறிய அலங்காரப் பொருட்கள் என்பன நிர்மாணிக்கப்படுகிறது. 

களிவளையம் களித்தகடு பயன்படுத்தி பாண்டங்களைத் தயாரித்தல். 

களிச்சுவர்த்தகடு, செதுக்கல் தகடு, கோபுரகலசம், சிறு களிமண்சிலை, கெண்டி போன்ற பாண்டங்கள் தயாரிக்கப்படும்.

பாண்டங்களைச் சுடும் தொழில்நுட்பம்



பாண்டங்களைச் சுடுவதற்கு செங்கல், களிமண்ணைப் பயன்படுத்தி செய்யப்பட்ட விறகுப் போரணை உபயோகிக்கப்படும்.

போறணையின் உள்ளே தேங்காய் உரி மட்டைகளைப் பயன்படுத்தி ஒருநாள் முழுவதும் 600சதம பாகை வெப்பநிலையில் எரிக்கப்படும்.

மட்பாண்டக் கைத்தொழில் வீடியோ பாடப்பகுதியை பார்வையிட இதன் மேல் கிளிக் செய்க.




கருத்துகள்