சிறுவர் காட்டூன் படக்கதை

காட்டூனைக் கேலிச்சித்திரங்கள் எனவும் அழைப்பார்கள். இந்த கேலிச் சித்திரக்கதைகள் அல்லது காட்டூன்கள் எனப்படுபவை நகைச்சுவையான கதைப் பாத்திரங்ளைக் கொண்டு, ஓரு கதையை நகைச்சுவையாக, திரைப்பட வடிவில் கூறுவதாகும். இதற்காக, பிள்ளைகளின் மனதைக் கவர்கின்ற எளிமையான தளவடிவங்களைக் கொண்டு உருவங்கள் வரையப்பட்டு, அவ்வுருவங்களுக்கு கணனித் தொழிநுட்பமூடாக, அசைவினைக் கொடுத்து, உயிரூட்டியே காட்ரூன் நிர்மாணிக்கப்படுகிறது. 

ஆரம்பகாலத்தில், ஆக்கப்பட்ட காட்டூன் கதைப் படங்களுக்கு அசைவினைக் காட்ட பெரும் தொகையான சித்திரங்கள் சித்திரக்கலைஞர்களால் வரையப்பட்டது. ஒவ்வொரு, சிறிய அசைவினைக் காட்டவும், பெருந்தொகையான சித்திரங்கள் வரையப்பட்டன. ஆனால் தற்போது, கணணித் தொழிநுட்பத்தின் விருத்தி காரணமாக, மிக எளிதாக தயாரிக்க முடிகிறது.

ஒரு காட்டூன் பாத்திரத்திற்கு நகைச்சுவை, ஆச்சரியம், அச்சம், மகிழ்ச்சி போன்ற உணர்வுகளைக் காட்டுவதற்கு மெதுவான மற்றும் வேகமான அசைவுகளைக் காட்டுவதன் மூலமே உணர்வுகள் வெளிக்காட்டப்படுகிறது. காட்டூன் படக்கதைகளில், ஒரு விசேடமான விடயம் என்னவென்றால், மரம் செடி கொடிகள், மலர், ஆறு போன்ற இயற்கைச் சூழலில் உள்ள அம்சங்களும் கட்டடங்கள், வாகனங்கள், தளபாடங்கள், சமயறை உபகரணங்கள் போன்ற மனிதனாலாக்கப்பட்ட பொருட்களும் கண், மூக்கு, வாய் என்பன காட்டப்பட்டு உயிருள்ளவை போன்று சித்தரிக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் அவை மகிழ்ச்சி, துக்கம், கோபம் போன்ற உணர்வுகளை வெளிக்காட்டி உரையாடுகின்ற உயிரோட்டமான பாத்திரங்களாக காணப்படுவதை பார்க்க முடியும்.

    மனித உருங்கள் அனைத்தும் எப்போதும் நகைச்சுவையை வெளிப்படுத்துவனவாகவும், பிராணி உருவங்கள் மனிதர்களைப் போல் ஆடையணிந்து, இரண்டு கால்களில் நடப்பதைப் போன்றும் காட்டப்பட்டிருக்கும். இவ்வாடைகள் எப்போதும் கண்ணைக் கவரும் பல்வேறு வர்ணங்களில், கவர்ச்சிகரமாக வரையப்பட்டிருக்கும்.  


    
காட்ரூன் கதையானது, மேலும் சிறப்பாக அமைவதற்கு, உரையாடல், பின்ணனி இசை, பாடல் என்பன உதவுகின்றது. 

இந்த காட்ரூன் சித்திர படக்கதையானது 1908இல் ஆரம்பிக்கப்பட்டது. 1908 இல் தயாரிக்கப்பட்ட பன்ராஸ் மஜாரீ (Fanta’s Magorie) என்னும் காட்ரூன் கதையே காட்டூன் வரலாற்றின் முதல் காட்ரூன் படக்கதை ஆகும். 

    அதன் பின் 1928 இல் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற வோல்ட்டிஸ்னி அவர்களின் தயாரிப்பாகிய மிக்கி மவுஸ் காட்ரூன் கதையானது பிரபலமானதாகக் காணப்பட்டது. 

    சிறுவர் உலகில் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சியாக இந்த காட்ரூன் கதைகள் காணப்படுகிறது. ஏனெனில், காட்ரூன் கதாபாத்திரங்கள் மற்றும் காட்சிச் சித்தரிப்புகள் என்பன சிறுவர்களிடத்தில் பிரபலமடைய காரணமாக அமைந்தது நிஜவாழ்வில் நடக்க முடியாத சில நகைச்சுவையான கற்பனைக் காட்சிகளும் அதற்கு பிரயோகிக்கப்படும் வர்ணங்களும் ஆகும்.

உலகம் முழுவதும் அதிக பிள்ளைகள் காட்டுன் கதையை விரும்பிப் பார்க்க ஆரம்பித்ததால் நாளடைவில் பல்வேறு வகையான காட்ரூன் கதைப் படைப்புக்களும் உருவாகத் தொடங்கின. ஆயினும் காட்ரூன் கதைப்படத்தில் முன்பு கவனத்தில் கொள்ளப்பட்ட சிறுவர்களுக்கான பிரத்தியேகமான சில விடயங்கள் மீது பின்பு வந்த காட்ரூன்களின் கவனம் குறைவடைய ஆரம்பித்தது. இதன் விளைவாக பிள்ளைகள் பார்ப்பதற்கு பொருத்தமற்ற பயங்கரமான அல்லது வன்முறையைத் தூண்டும் காட்ரூன் கதைகள் வெளிவரத் தொடங்கின.  

இலங்கையின் காட்டூன் படக்கலை

        இலங்கையின் காட்டூன் படக்கலையின், முன்னோடிக் கலைஞராக இருப்பவர், டைட்டஸ் தொட்டவத்த ஆவார். இவர், மருதானை தொழில்நுட்பக்கல்லூரியில், புகைப்படக்கலையையும், ஹேவுட் நிறுவனத்தில், சித்திர சிற்பக்கலையை பயின்றதோடு, கூடவே நடனமும் சங்கீதமும் பயின்றார். இத்தோடு, இலக்கிய அறிவையும், வீடியோ எடிற்றிங் எனப்படும் திரைப்பட செவ்வியாக்கத் துறை அறிவையும் பெற்றார். இவ்வாறு, இலங்கையில் காட்டூன் கருத்துப் படக்கதைக் கலையை இந்தளவு சிறப்பாக முன்வைப்பதற்கு டைட்டஸ் தொட்டவத்த அவர்கள் பெற்றிருந்த அழகியல் துறைசார் அறிவே பெருந்துணையாக அமைந்தது.   

போல்ஹேன் கொடையில் அமைந்துள்ள அரச திரைப்பட கலைக்கூடத்தில் 15 மில்லி மீற்றர் திரைப்பட ஊடகத்தைப் பயன்படுத்தி, ஹான்ஸ் கிறிஸ்ரியன் அன்டர்சன் எழுதிய ஒரு கதையை அடிப்படையாகக் கொண்டு அஹள பஹள, லொக்கு பாஸ் பொடி பாஸ் என்னும் காட்டூன் படக்கதையை தயாரித்தார். முதல் தடவையாக, சிங்கள மொழியில் குரல் சேர்க்கப்பட்ட, இந்தக் காட்டூன் படக்கதை நிகழ்ச்சி, வீடியோ தொழிநுட்பத்திற்கு மாற்றப்பட்டு 1985 பெப்ரவரி 15 மாலை 6.00 மணிக்கு தேசிய தொலைக்காட்சியாகிய ரூபவாகினியில் ஒளிபரப்புச் செய்யப்பட்டது. அதே நாள் இரவு 8.30 மணிக்கு டொக்டர் டூ லிற்ரில் எனப்படும் தொஸ்தரஹொந்தஹிந்த என்ற இலங்கையின் முதலாவது காட்ரூன் கதைப்படமும் வெளியானது. 


இதன் பின்னர், பிஸ்ஸுபூசா, ஹா ஹா ஹரி ஹாவா, வளஸ் மாமா, இங்குறு பாண் மல்லி, புரூம், சப்ப துக்க ஹாறன மீயோ, வூஃபீ, ஞானக்கத்தா மல்லி, தங்கர வலிக லப வானர, கூம்பிச்சி, சயுரி போன்ற பல காட்ரூன் கதைகள் சிங்களத்தில் குரல் சேர்க்கப்பட்டு ஓளிபரப்பப்பட்டன. 


ஓரு காட்டுன் கதைகளைத் தெரிவு செய்யும் போது அதனைப்பார்க்கும் சிறுவர்களின் உள்ளத்தில் நல்ல மனப்பாங்குளை வளர்ப்பதற்கு ஏற்றவையா என்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது. சிறுவர்களுக்கு தலைமைத்துவப் பண்புகள், பொறுமை, பிறருக்கு உதவி புரிதல், சமயோசித புத்தி, தையம், அஞ்சாமை, பிறர் நலனில் அக்கறை காட்டல் போன்ற சமூக விழுமியங்கள் போன்றன இந்த காட்டூன் கருத்துப்படக் கதைகளில் காணக்கூடியதாக உள்ளது. உதாரணமாக தொஸ்தர ஹொந்தஹித்த, கூம்பிச்சி (எறும்பு) போன்ற கதைகளில் காணக்கூடியதாக உள்ளது.

வெளிநாட்டு காட்டூன் கதைகளில் ஆங்கிலத்தில் உள்ள உரையாடல்களை சிங்கள மொழியில் குரல் சேர்க்கும் போது இலங்கை கலை கலாச்சாரத்திற்கு பொருத்தமானவாறும், மூலப்படைப்பிற்கு பாதிப்பு ஏற்படாதவாறும், சிறுவர்களின் உள்ளத்திற்கு பொருத்தமானவாறும், அழகாகத் தயாரித்துள்ளார்கள்.

இவ்வாறு சிறந்த தரமான காட்டூன் கதைப்படத்தினை பார்பதன் ஊடாக நாம் மகிழ்ச்சியடைவதோடு மட்டுமின்றி நம் வாழ்க்கைக்கு முன்மாதிpயாக அமையும் யாதேனும் அறிவுரையைப் பெற்று நற்பண்பினை வளர்த்துக் கொள்ளலாம்,

காட்டூன் நிர்மாணிப்புக்களில் பலவித சித்திரப் பண்புகளைக் காணலாம்.

எளிமையான மற்றும் கருத்து நிலையான வடிவங்கள் இருபரிமாண முப்பரிமாண முறையில் வரையப்பட்டுள்ளது.
நிர்மாணிக்கப்பட்ட உருவங்களுக்கு கணினி தொழில் நுட்பம் ஊடாக உயிப்பூட்டி காட்டூன் நிர்மாணிக்ப்படும்.
பிள்ளைகளின் மனதைக் கவர்கின்ற தளவடிவங்கள் வர்ணங்கள் உபயோகிக்கப்படுகிறது. 
எம்மைச் சூழ உள்ள இயற்கை செயற்கைப் பொருட்கள் உயிர்த் தன்மையுடன் காட்டப்பட்டு காட்டூன் நிர்மாணிக்கப்படுகிறது.
காட்டூன் சிறப்பாக அமைய உரையாடல், பின்ணனி இசை, பாடலமைப்பு போன்றவை உதவுகிறது.




கருத்துகள்